Featured

First blog post

This is the post excerpt.

Advertisements

This is your very first post. Click the Edit link to modify or delete it, or start a new post. If you like, use this post to tell readers why you started this blog and what you plan to do with it.

post

பூமரப்பாவை நீயடி !!!!

அழகிய சுபயோக தினத்தில் …..

ஓர்  இளங்காலைப்பொழுதில்……அதிர்ஷ்ட்ட தேவனாய்

மூன்று வருடங்களாக  பேசாத  நண்பன் ரவி ….

சிவாவின் ஒர்க் ஷாப் க்கு தேடி வந்து நின்றபோது….

அன்று அர்த்தம் உள்ள நாளானது …நம் நாயகனுக்கு….

ஆதி அந்த கோபதாபங்களை விட்டுவிட்டு..அனைத்தையும் மறந்து…

“வா..மச்சி ..”  பழைய பாசம் பொங்க……மகிழ்ச்சியோடு வரவேற்றான்….சிவா…

ரவிச்சந்திரனும்  பதிலுக்கு புன்னகைக்க…

“சொல்லு மச்சி வீட்ல அம்மா  நல்லா இருக்காங்களா??”

“ம்ம்ம்….”சுரத்தே இல்லாமல்….முனகியவன்….

“முக்கியமான விஷயம் பேச வந்தேன்..சிவா….எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல…” பலத்த பீடிகையோடு

“ஸ்ரீ…..” என்று இழுக்க…

ஏற்கனவே ரவி முகம் பார்த்து குழம்பிய….சிவா…

“ஸ்ரீக்கு என்ன ரவி????” பதட்டத்துடன் கேட்க…..!

“உன்ன கட்டிக்க ஆசை படுறா!!!  முகம் கடுக்க சொன்னான்…

இதோடா !!!இதுக்கு தான் இந்த ரியாக்ஷனா??

முன்பு ஸ்ரீயை எனக்கு தருவியா??? என்று சிவா கேட்க போய் தான் ….நட்பு உடைந்தது…. எல்லையும் பிரிக்கப்பட்டு இரு வேறு துருவங்களானார்கள்…

திரும்ப முதலிலிருந்தா??….நம்ப முடியவில்லை….

அவனா? இப்ப நம்மை கேட்குறான்… என் தங்கச்சியை கட்டிக்க ன்னு….இன்னும் கூட நம்ப முடியாது இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றான்…சிவா….

அச்சிறிய நேரம் கூட வீணாக  விரும்பாதவன் போல ரவி அவசரப்பட்டான்…

“பதில் சொல்லு  சிவா…..யெஸ் ஆர் நோ ????”

“1000 டைம்ஸ் எஸ் மச்சி..”……..உற்சாகமாய்….

“ஆனா எனக்கு பிடிக்கல சிவா…ஸ்ரீ உறுதியா உங்கிட்ட கேட்க சொன்னா…. அவ இஷ்டத்தால  இந்த  கல்யாணம்…

நான் மூணு வருஷத்துக்கு முன்னாடி சொன்னது சொன்னது தான் சிவா….”

அப்புறம்  நீயும் கேள்வி பட்டிருப்ப ஸ்ரீக்கு நிச்சயம் பண்ண ப்ரொபோசல் நின்னு போனத பத்தி எதாவது விளக்கம்  வேணுமா???? கசந்த குரலில்

அதெல்லாம் வேணாம் ரவி ….

வா என்ன சாப்பிடுற சொல்லு….இலகுவாக வேறு பேச்சுக்கு மாற்றினான்…

அடுத்து ரவி தன் கணக்கு பிள்ளை வேலையை தொடங்க…

ஓகே…..சிவா எவ்ளோ வச்சிருக்க சேவிங்ஸ்??? எல்லாத்தையும் குடு….தேதி சொன்னான் …அன்னைக்கு திருமணம் ரெடி யாய்க்கோ…… ஏ டி எம் கார்டுகள் .பின் நம்பர்கள்…உன் மோதிரத்தை குடு….

அவ்ளோதான் போய்ட்டான்….

கனவு கைசேர்ந்தத்து போதும்…..சிவாவுக்கு….

தேவை என்றால் வைத்து கொள்வதும் ..வேண்டாம் என்றால் கொத்தோடு அத்துக்கொள்வதும் ரவியின்  இயல்பு…..
தெரிந்தாலும் அவன் அப்படி தான் ..விட்டு விட்டான்…

பாசம் கண்ணை மறைக்குது…மத்தபடி யாரையும் ஏமாற்றாதவன்…

இது தான் சிவா….எதிலும் நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்பவன்.

இனியவன்….பண்பானவன்…பொறுமையானவன்….

அழகனும் கூட….

வாதுமை நிறத்தில் ஆண்களுக்கே உரிய கம்பீர உடம்பும் ……

கருமையிலும் பள பளக்கும்அடர்ந்த கேசமும்….

கவர்ச்சியான ஆழ்ந்த  சிறு கண்களும்…….

கூர் மூக்கும்….பட்டை மீசைக்கு கீழ் ….

நிறம் மாறாமல் திமிரில் முறுக்கி நிற்கும் முரட்டு அதரங்களும்…..

அவன் அரிதாய் புன்னகைக்கும் போது மின்னலை போல் பளிச்சிடும் முத்து எயிறுகளும் …….

உருண்டு திரண்ட அகன்ற தோள்களும் …..பெரிய ராஜாளியின் சிறகை போன்று கரங்களும்….

தேக்கு  தேகத்தை தாங்கும் உறுதியான
நீண்ட கால்களும்……..கட்டழகனாய் காட்ட…

இளம் பெண்களின் கனவை திருடுபவனாய் அவன் இருப்பதை அவனே அறியான்…..

காரணம்…..ஹாஹா….அவ்ளோ நல்லவன்…..

திருமணத்திற்கு.   சரியாக 10 நாளிருக்க……

இன்று நல்லவனையும் உரசிப்பார்க்க விதிக்கு ஆசை வர….

அவனை இந்த நாள் மாற்றி போடப்போவதை அறியாமல்…..

இரவுவில் இயல்பு போல்…..
தூங்கும் முன் சம்மணம் இட்டு அமர்ந்து  …..

அன்று செய்தவைகளை மனதிலே ஓட்டிப்பார்த்துக்கொண்டிருக்க….

அந்த மோனத்தை கலைக்கும் விதமாய் போன் அழைக்க….

திரையை பார்க்க…..ரவி என்றது….

‘என்ன இந்த நேரத்துல….’

அனிச்சையாக ….எடுத்து….

“சொல்லு ரவி…”

“நானும் அம்மாவும் ஊருக்கு கார்டு வைக்க போறோம்….”

நந்துமொட்டையாய் .சொல்ல….அவன் என்னைக்குத்தான் திறந்த புத்தகமாய் இருந்திருக்கிறான்….

விளங்கா விட்டாலும்….

“ம்ம்ம்…சரி …மச்சி நல்ல படியா போயிட்டு வா….”

“ஏற்பாடுலாம் எப்படி போய்ட்டுருக்கு சிவா”

“பக்கா மச்சி” சித்தப்பா நல்லா ஹெல்ப் பண்றார்…

“ம்ம்….அப்புறம்….ஒரு ரிக்வஸட் டா????”

“ம்…சொல்லு மச்சி…!!!!”

“ஸ்ரீ வீட்ல தனியா இருக்கா!!!!”

“ம்ம்……”

‘எட்டி பார்த்துக்க சொல்றானோ????’

‘நானும் யோசனையாய் !!!!!!??’

“உனக்கு நல்லா தெரியும்….  …..”

“எவ்வளவோ பிரச்சனைக்கு நடுவில் இந்த கல்யாணம் நடக்குது மச்சி….. உனக்கு கிடைக்கிற பொண்ணே கிடையாது என் தங்கச்சி…..”

இதுக்கு உம் சொல்ல கடுப்பு வந்தது..

தொடங்கிட்டான்டா…லூசு…”அட போடா…..”

“கேக்குதா மச்சி?…..”

” ம்ம்…சொல்லு ரவி……”

“மச்சி “யை வேணும் என்றே தவிர்த்து……

ஊக்கினேன்….

“அதனால” அவன் திக்க

“அதனால….சொல்ல வரதை சொல்லிரு ….நான் புரிஞ்சிப்பேன்….நந்து…” எரிச்சலை அடக்கிய அமைதியுடன்…

மூன்று வருஷத்திற்கு முன் அணைந்து முடித்த தீயின் சாம்பலில் ஒரு பொறி உயிர் பெற..இவனுள்ளே வெப்பம் …கூட…

“கல்யாணம் நல்லபடியா முடியுற வரை எங்க வீட்டு சைடு போவதோ….. ஸ்ரீ க்கு போன் பண்ணுவதோ?….. எதுவும் பண்ணிடாத…..சிவா…
எங்க பாமிலி ல எல்லோரும் படிச்சவங்க ….கவுரவம் பார்ப்பாங்க……பார்த்து நடந்துக்கோ….எந்த இஷ்யூம் வராம …சொல்றத சொல்லிட்டேன்..நல்ல ஆழத்தில் சொல் அம்பு  விட்டு சொருகிட்டு…

பிறகு நல்லவனாக…
“சண்டே ஈவினிங் வந்துடுவேன்….பை மச்சி….”

நான் இவன் ஊருக்கு போறதுக்காக காத்து இருக்குற மாதிரியே பேசுறான்….

இவனுள் ஒரு வேகம் சுறு சுறு வென எழுந்து….

ஏதாச்சும் பண்ணியே ஆகணும் சொல்ல…

யெஸ்…யெஸ்…

திகு திகு வென அவன் கொளுத்தி போட்ட வார்த்தைகளால் பொறி பற்றி படர்ந்து அவனை எரிக்க தொடங்கியது….
இவனுக்கு ஒன்னும் புரியல….
அதெப்படி என்னை “பொறுக்கி”யாகவே சொல்றான்…
நந்து உன்ன எவ்ளோவோ பொறுத்து போய்ட்டேன்
நேரில் கேட்பது போல….பேசினான்…
ஆனா உன் அல்பத்தனம் அதிகமாயிருச்சே தவிர திருத்திக்கல….திருந்தல… தெரியல…
உனக்கு பதில் கொடுத்தால் ரெண்டு பேருக்குமே வலிக்கும்….என்னோடு போகட்டும் ன்னு தான் அமைதியா இருந்தேன்…..இருக்கேன்…
அதுக்காக நான் கோழை கிடையாது….புரிஞ்சிக்க….
உனக்கு உன் குடும்பம்..உன் உறவுகள் முக்கியம் தான்…
அதற்காக….
அடுத்தவங்கயெல்லாம் துச்சமா பார்க்குறது…ஹர்ட் பன்றது அராஜகம்……
ஏற்றுகொள்ளமுடியாதது…..

எப்பப்பாரு …”தங்கச்சி” “தங்கச்சி “ன்னு உருகிட்டு…லூசு…
அழகி…உன் தங்காச்சி… அந்த ரதி தேவிய தொட்டு தடவி கர்ப்பம் ஆக்கிருவேனா???? ஒரே வாரத்துல???

போடா…..ங் கெட்ட வார்த்தை……ஒன்றை உதிர்த்தான்…
ரவியால் இன்னைக்கு மட்டுமா நோவுறேன்….எப்பவும் இப்படித்தானே…..உக்கிரமானேன்…கோபம் ஸ்ரீயிடம் திரும்ப…
உக்கும்…..உலக பேரழகி….அந்த கருவாச்சிக்கு இவன் ஓவரா ஸீன் போடுறான்….
பொய் ……….அவ ஒன்னும் அவ்ளோ கருப்பு இல்ல….ஜொள்ளியது ஆசை மனம்…
போ போ ..!.உன்னால தான் இவன் கிட்ட சிக்கி சீரழிரேன்…காண்டானான்…மனசாட்சியிடம்…
டாக்டருக்கு படிக்கிறா ல அதான்….அவன் ரொம்ப பண்றான்…ஹிஹி…பாசமனம்…வழிய…..நந்துக்காக…
இன்னும் மெரிட் ல சீட் கிடைச்சிருந்தா அவ எப்படியோ இவன தரையில் பார்க்க முடியாது…..
என்னை கிரிமினல் மாதிரி ட்ரீட் பண்றானே??? …..

போறான் போவிடு ன்னு நார்மல் மனம் அடக்க அடக்க ஆத்திரம் அலைஅலையாய் பொங்கியது….
நல்லவனை சந்தேகபட்டால் வரும் நியாயமான கோபம்…..

இதுக்கு கண்டிப்பா அவன் சொன்னதை செய்யணும் பிடிவாதம் வந்தது…நந்து சும்மா இருந்தவனை சீண்டிட்ட……

“போறேன்டா….போறேன் இப்பவே ….உன் அருமை தங்கச்சி உன் பாசமலரு…..
அந்த சீம சித்ராங்கி ஸ்ரீ தேவிய முத்தம் கொடுக்க போறேன் தொட போறேன் வீட்டுக்கு போறேன் போன் பண்ண போறேன்.”
போடா…. இனி என்னவேணும்ன்னாலும் பண்ணிக்க…அது எந்த மாதிரி ன்னாலும் ஓகே…
முதல்முறை சபதம் என்பதால்
சொதப்பி ரிவெர்சில் எடுத்தான்…..
ஹாஹா விதி சிரித்தது…..அவன் அப்பாவி தனத்தை….கண்டு….
அவள் முகநூல் கணக்குக்கு போக….அவ சாட் டில் இருந்தாள்
க்கும்…இதோ பார்…
இப்டி ஒரு லேடி கேடி ய வச்சிக்கிட்டு வாய் பேசிட்டு திரிறான் பாரு….ரவி கிறுக்கன்….
அவள் ஆன்லைன் சுத்திறதுக்கும் காய்ந்தான்…

“ஹாய் ஸ்ரீ….நான் சிவா”
இத்தனை நாள் வராத தைரியம் இன்று அபரிதமாய் இருக்க…
நந்து வச்சி பண்ணதிற்கு….அவளை ஒரு வழி ஆக்கனும் வேகத்தில் இருந்தான்….

“ஓ”
ஒற்றை வார்த்தை…
ரிப்ளைஅவளிடமிருந்துவர….கடுப்பானான்….
“என்னாடி இது ரியாக்ஷன்….ஓஓய்….”
கெட்டவன் ரொம்ப அலப்பறை குடுத்தான்……இத்தனை நாள் இல்லாத சுதந்திரம் கிடைக்க…..
நம்மள லூசாக்கிடுவாய்ங்க போல….பாசமலருக….
“ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…ரவி பற்றி……சாட் பண்ண முடியாது….உன் மொபைல் நம்பர் சென்ட் பண்ணு..”
அனுப்பிவிட்டாள்….
ஐயோ !!!!
நொந்தான்…..நான் தான் இத்தனை நாள் கேக்க பயந்துட்டு கிடந்திருக்கேன்….லூசு ..லூசு…வெட்கம் வந்தது….
அடுத்த நிமிடம் அவளை அழைக்க….
முதல் ரிங் லேயே எடுத்துவிட்டாள்…

“நான் சிவா …..”
“சொல்லுங்க சிவா …அண்ணா பத்தி என்ன????”
என்னது சிவா வா???? மலைத்தான்
பேர் சொல்லியா கூப்டுர ????
வா!! வா!!! ஜிலேபி !!! என் வீட்டுக்கு….மரியாதை தெரியாத வாய கடிச்சி வைக்கிறேன்…கொஞ்சிக்கொண்டான் மனதில்….
ஒருத்தன் போன் பண்றனே ??? எப்படி இருக்கீங்க??சாப்டீங்களா??? ஒன்னும் இல்ல….
குடும்பத்துக்கே பேச தெரியாது போல….
அவளிடம் கோபவேகமாய் பேச ஆசைதான் ஆனால் இவளைக்காயப்படுத்தி என்ன ஆவப்போவுது….
முத்தம் வேணாம்…தொட வேணாம்….

அவன் வீட்டு படியை தொட்டுட்டு வந்துருவோம்….

சபதம் அவனாலேயே திருத்தி அமைக்கப்பட….சாந்தமானான்…
இது தான் நல்ல சிவா…
“தேவி…”
“ஹாங்”
தூங்கலியா??? …..நேரமாச்சே???…
“இப்ப தூங்கப்போறேன் அவ்ளோதான்…..”
மெல்லிய ஒலியில் அழகிய ஸ்டைலில் அவள் பேச…..
அது வசிய மந்திரமாய் காதுக்குள் இறங்கி மயக்கம் தர….
பெண் அறியா அந்த இளங்காதலன மனம் கிளர்ந்து கிறங்கியது….
வாவ்….படிப்பு படிப்பு தான்…மெச்சிக்கொண்டான்…மயக்கி!!!
“ஏதோ வால்யூபல் திங்க்ஸ் போல……ரவி உங்கிட்ட குடுக்க சொன்னான்…இப்ப உடனே வீட்டுக்கு வரேன்…தூங்கிடாத….”
“அப்படியா ???? அண்ணன் இப்பக் கூட பேசினானே….ஏதும் சொல்லலியே????” அப்பாவியாய் அவள் எதிர் கேள்வி கேட்க….
“அப்ப நான் பொய் சொல்றேன். ….வேணாம் விடு…”சுள்ளென கோபப்பட்டு…
கால் கட் பண்ணி விட்டான்……
ஒரு ஆணியும் புடுங்கல போடி…..
பொய் தான்….தப்பு தான் ….தெரிந்தாலும்…..,
இவனுக்கும் இதுக்கு மேல பொய் வராது….
சமர்த்து பத்தாது….என்ன செய்ய??..
பின் செல்ல விருப்பமின்றி முட்டுச்சந்தில் முட்டி நின்றான்….
அவளை பார்க்கணும்….இப்பவே…இப்பவே… 

பூ மரப்பாவை நீயடி !!!!!

இத்தனை நாள் உறுத்தாத தனிமையை வெறுமையை நிராசையால்உணர……
ஹாலில் கிடந்த.கௌச்சில் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தான்…அந்த தொட்டாற்சிணுங்கி மனசுகாரன்…….
அவள் கூப்பிட்டாள்…
இவன் எடுக்கவில்லை….போடி…மினுக்கி…..கோபபட்டான்…முன் எழுந்த சினத்தின் எச்சம்….
அவளும் விடவில்லை….தொடர்ந்த….
இத்தேடல் அவனுக்கு இதம் தர….முகம் தானாய் கனிய……
ஆன் பண்ணி சும்மா இருந்தான்….
“கோபமா? சிவா??” கலக்கமாய் அவள் கேட்க……

அவன் மனதில் சாரல் மழை….
“இல்ல….”மிஞ்சினான்…உதடு வளைய….பழம்விட்ட சிறுப்பிள்ளையின் மகிழ்வு முகத்தில்….…


“ரவி வீட்டை வெளில பூட்டிட்டு எல்லோரும் ஊருக்கு போனமாறி செட் பண்ணிட்டு போய்ட்டான்…வந்தா பின்வாச வழியா தான் வரணும் ……..அதுவும் யாருக்கும் தெரியாம முடியுமா????”

“ம்ம்ம் வரேன்….” வாய் சொன்னாலும்…. யோசனையாய்…இப்படி திருடன் மாதிரி .போய்தான் ஆகனுமா???

போறோம்…போறோம்….உரு போட்டது பிடிவாத மனது….ரவி …ரவி… அவனை
நினை….எல்லை விட்டு எல்லை தாண்டலாம்….எடுத்து குடுத்து உசுப்பேத்தியது….

“சிவா….கம்பௌண்ட்லாம் ஏறி குதிக்கணும்…பார்த்துக்கோங்க….” அவளும் அதையே சொல்ல….
தளர்ந்த எண்ணம் வலுப்பெற்றது….
“அதெல்லாம் வந்துடுவேன்கிட்ட வரும் போது கூப்பிடுறேன் செல் கிட்ட வச்சுக்க….”
பை…இருவரும் இருமனமாய் விடை பெற…
அவன் வரேன்னு சொல்லி ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆக…
தவித்தாள்….பைக் ல வர 10 நிமிஷம் கூட ஆகாது…..
சீக்கிரம் வந்தா தான் என்ன ???
ஏனோ ஒரு இனம் புரியா உணர்வு….
நயிட்டி யை மாத்தி கண்ணை உறுத்தாத நிறத்தில் காட்டன் சூடி அணிந்து கொண்டாள்… முகம் எப்பவும் போல் ப்ளீச் …கண்ணிற்கு தெரியாத கருப்பு பொட்டு…கண்ணாடி பார்த்து திருப்தி பட்டுக்கொண்டாள்…
அவனுக்கு என்னை பிடிக்குமா???? சந்தேகம் வந்தது….தன் நிறம் குறித்து கொஞ்சம் டவுட்….  

சிவா …போ போ உனக்கு குடுத்து வச்சது அவ்ளோ தான்….தன்னையே கேலி பண்ணி கொண்டாள்…. அவன் எப்படி இருப்பான்….ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வரிவடிவமாய் பார்த்தது அவனை… எப்படி இருந்தா என்ன?.. உனக்கு குடுத்த வச்சதும் அதே…அதே… மனதோடு உதடும் புன்னகைக்க….. தலை வாருவோமா????…வேணாம் மேக்கப் போட்டது போல் இருக்கும்… கல்யாணப்பொண்ணு பூ தினமும் வைக்கணும் ன்னு அதட்டி தலையில் அம்மா
வைத்துவிட்டஇரண்டு முழம் மல்லிப்பூ இருக்க…இது கொஞ்சம் ஓவர் தான்….
தலையும் சில்லுப்பி கிடைக்க….லேசாய் கைகளால் கோதி சரிபண்ணி விட்டு…
நிலைகண்ணாடியில் முன்னும் பின்னும் திருப்பி பார்த்து திருப்தி கொண்டாள்…. கொஞ்சம் பூசினாற்போல் உடம்பு……அலை அலையாய் இடுப்பைத் தொடும் வரை கத்தரித்த அடர்த்தி கூந்தலும், ….அதற்கு பொருத்தமாய் பட்டை புருவமும்…
.சராசரி பெண்களை விட நிமிர்வாய் தெரியும் உயரமும்…….
கண்ணில் கருவிழிகள் கோலி குண்டாய் பளபள வென மினுங்க பெரிதாய் இருக்க பாவையின் வெண்மை குறைய…..அவளின் ஒட்டு மொத்த பிளஸ் கண்கள் தான்….வட்டவிழி அழகி…. பெண்மையின் நளினமான வளைவுகளை நவீன உடைகள் கூட்டி காட்ட ……..மாநிற சிலையழகாய் இருந்தாள்….ஸ்ரீ….. பார்க்க பார்க்க பிடிக்கும் அழகு அவளுக்கு…..
அவனுக்கு என்னை பிடிக்குமா?… கேள்வி மனதை குடைந்தது?…. இது அவள் நிலையில் உள்ள பெண்ணுக்கு வரும்….தயக்கமே……
அவனுடன் பேசியதில்லை… பழகியது இல்லை….ஏன் பார்த்தது கூட இல்லை… வேறொரு ஆணுக்கு நிச்சியிக்கப்பட்டு அது கார் வேணும்ங்குற பேரத்தில் முட்டிக்கொள்ள….இரண்டாவது சிவா ….அவன் மனம் அறியாமல்
ஒரு கோபத்தில் அம்மா கோண்டுக்கெல்லாம் என்னால வாழ்க்கை குடுக்க முடியாது……
உன் டியர் பிரன்ட் அவர் பேர் என்ன??? ஜிம் கூட வச்சிருக்காரே?….ஹாங்…சிவா அவர் மேல எனக்கு எப்பவும் மரியாதை உண்டு அவர்கிட்ட கேளு….என்ன கல்யாணம் பண்ணிக்கிறாரா? ன்னு….இவள் சொல்லிவிட… ரவிக்கு பேரதிர்ச்சி….. விளையாடுறியா??? பேச்சுக்கு கூட சொல்லாத….லூசு…. காரமாய்ச் சொன்னான்…. சும்மாலாம் சொலலண்ணா…. அவரை பத்தி நீ சொன்னதை வச்சி தான் …மரியாதை உண்டு….தாய் தகப்பன் இல்லாம தனியா கௌரவமா வாழும் ஆணுக்காச்சும் துணையா இருக்கலாம்…….ஒரு பீல்…. போ போ அம்மா சொல்றாங்க ஆட்டுக்குட்டி சொல்றாங்க என்று பொறுப்பை பெத்தவங்க மேல சார்த்தும் அந்த வெல் செட்டில்டு
பெரிய மனுஷன் கிட்ட…. கல்யாணம் பண்ணி தர மாட்டேன் ன்னு நீயே சொல்லிரு……….
அப்ப நிஜமா தான் சொல்லூறியா???
யெஸ்..யெஸ்…விலை கேட்கும் யாரும் வேணாம்….அவர் வேணாம் ன்னா ….எங்க ஜானு மேம் மாதிரி கல்யாணம் பண்ணிக்காம சோசியல் சர்வீஸ்கே அர்பணிச்சுக்குவேன்….அவ்ளோ தான் என் முடிவு… என் வாழ்க்கைஅர்த்தம் உள்ளதா இருக்கணும்….

பிள்ளைமனம் கொண்டவளிடம் இந்த முடிவை எதிர்பார்க்காததால்……
ரவி சிந்தனையில் முகம் சுருக்க….
‘சிவா வை பற்றி தான் ரவி யோசிக்கிறேன் போல நினைத்தவள்’

சிவா ….உனக்காக என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரா???
“அதெல்லாம் பண்ணிப்பான்…என் தங்கச்சியை கட்ட கசக்குமாக்கும்…..உன் படிப்பு தான் வீணா போயிரும்…..ஸ்ரீ…..அடுத்து கரியர் பாதிக்கும்…
வேற நல்ல வரன்னா? பார்ப்போமே??? அவன் ஜஸ்ட் டிகிரி ஹோல்டர் தான்…
வருமானமும் மிதமா தான் இருக்கும்…வேற இனம்…நம்ம சொந்தக்காரங்க தப்பா பேசுவாங்க ..ஸ்ரீ…”
கடுப்பான ஸ்ரீ ….இவன் வேற கவுரவம் பார்த்துகிட்டு….அம்மா அப்பா இருந்து செக்யூர்டு ஹாப்பி லைப் சொல்றவங்களாம்….. ஏன் ஸ்திர புத்தில இருக்குறதில்ல?
தன்னிச்சையாய் முடிவு எடுப்பதில்லை….மொத்தமாய் சமூகத்தையே காய்ந்தாள்

“அண்ணா..அவ்ளோ தான்….சிவா அவங்களை மட்டும் கேளு… அவங்க என்னை வேணாம் ன்னு சொல்லிட்டாலும் வருத்த படமாட்டேன்… மேம் மாதிரி சேவைக்கு போயிருவேன்……”முடித்து விட்டாள்….
அண்ணனிடம் சம்மதம் வாங்கியதை…..அம்மாவிடம் முன்பே ஆசை….என்கிறாற் போல் சமாளித்து விட்டாள்…அவரும் கௌரவம் பேச….அவருக்கும் சேவைக்கு போயிருவேன் என்று மிரட்டி ……
முதலில் பார்த்த மாப்பிள்ளைக்கு குறித்த தேதிலேயே ….. லேட் பண்ண வேண்டாம் என இவர்கள் திருமணத்தை வைத்துவிட்டான் ரவி….
சிவா வராத நேரத்தில்…பிளாஷ்பேக் ஓட்டி பார்த்துக்கொண்டிருக்க…சரியாக
சிவாவும் அழைக்க …..
பின்வாசல் வா… வந்துட்டேன்….

ம்ம்ம்…
பதட்டமும்..லேசாய் வெட்கமுமாய் ஓர் வினோத மனநிலை….
சமையல் கட்டில் விடி விளக்கை போட்டு…..
ஒரு பெரிய அடிததாண்டா மூன்று தாழ்பாள்கள் நீக்கி…அடுத்த கிரில் கேட் திறக்காமல் இருட்டில் நின்றவனை….தன் செல் போன் வெளிச்சத்தில் அடையாளம் பார்க்க அவன் மேல் அடிக்க…. லேசாய் புன்னகைத்து….. “நான் தான் ….தேவி ….தைரியமா திற…..” என்க…
“சிவா??? இவனா????”….!!!!!!!!!!???

“ஓ மை காட்…..”
கத்த தோன்றியதை சிரமப்பட்டு அடக்கினாள்….
அச்சோ….அச்சச்சோ….பிள்ளையாரப்பா!!!!
‘இப்டி செம்மையா இருக்கானே!!!’
‘ இப்பவே எல்லோருக்கும் சொல்லணுமே…..’
உள்ளே மனம் இளம் பெண்ணுக்கே உரிய எண்ணங்களால் ஆர்பரிக்க…. கை தானாய் தன் வேலையை பார்த்து அவனை உள்ளே விட….
வாங்க!!!!!! வரவேற்பாய்….
மங்கிய ஒளியில்அவனும் தலை அசைத்து ஏற்றுக்கொள்ள……. அவன் மயக்கும் உருவத்தை திரும்ப ஒருமுறை ரகசியமாய் பார்வையிட்டாள்… சாரலாய் ஆசைகள் தூவ…..
சிலிர்த்தாள்….’வாய்ப்பே இல்லை ஸ்ரீ…..செம்ம செலக்ஷன் டி……’
இன்னைக்கு நோ ஸ்லீப்…பிரண்ட்ஸ் எல்லோருக்கும் மெசேஜ் பண்ணனும்…அவளுக தூக்கதையெல்லாம் கெடுக்கணும்…..பிளான் பண்ணிவிட்டாள்……

அவன் கையில் நகைக்கடை கவர்….இருக்க…..திருப்தி பட்டுக் கொண்டாள்… உடனே அனுப்பிடனும்….உடனே அனுப்பிடனும்….திரும்ப திருப்ப சொல்லிக்கொண்டாள்…….
யார் பார்த்தாலும்…..அபாயம்….
அவனை வாங்க…..என்று வழி நடத்தி…. டைனிங் ரூம் தாண்டி…. தன் படிக்கும் அறைக்கு அழைத்து செல்ல….அங்கு எல் ஈ டி லைட் மிதமாய் வெளிச்சம் தர…. பொம்மைகளை புத்தகங்களுமாய் நிரம்பி கிடைக்க… படிக்கும் டேபி ளுக்கு அருகில் இருந்த சேரில் அமர வைத்து ….ஏ சி ஆன் பண்ணி
“இருங்க …சூடா பால் கொண்டு வரேன் ….ப்ளீஸ்…பைவ் மினிட்ஸ்….” இவன் மறுக்க முடியாத அளவு….மென்மையாக சொல்லி……

ஹால் லேயே உட்கார வச்சிருப்பேன்.. லைட் போடணும்…இந்த ரூம் ன்னா முழுக்க ஏசிக்காக குளோஸ் பண்ணியிருக்கு வெளிச்சம் தெரியாது….

“பரவாயில்ல…தேவி…”லேசாய் கூச்சத்தோடு….

அவள் போன பின் அவ்வறையை சும்மா பார்த்து வைத்தான்…
எதோ ஒரு சுகந்தமணம் வீசியது……..அவள் வாசமோ???….
மனம் நிச்சலனமாய் இருக்க…போதும்…வந்தாச்சு…பார்த்தாச்சு…

டெடி பியர்கள் வெவ்வேறு வடிவங்களில்…பார்பி பொம்மைகள்…
.புத்தகங்கள் தடி தடியாய்…அப்பெரிய அறையின் ஒரு மூலையில் கட்டில்….
அவனுக்கு வேறு எதையும் பார்க்க சங்கடம் வர….கையிலிருந்த கவரை தடவிக்கொண்டறிந்தான்….

அவளின் முகத்தில் வானவில்லாய் மாறி மாறித் தோன்றிய எண்ண ஜாலங்கள் இவனுக்கு என்ன வென்று தெரியாமல் போனாலும்….அவளுக்கு தன்னை பற்றி எந்த எதிர்மறை எண்ணங்களும் இல்லை என நன்றாக உணர்ந்திருந்தான்…..

கதவு தட்டி உள் வந்தவள்…. சூடான பாலை அவனுக்கு கொடுத்தாள்…வாங்கி டேபிளில் சர்வ நிதானமாய் வைத்தவன்…….
கொண்டு வந்த கவரை அவளிடம் கொடுத்தான்…….

அதை வாங்கி அருகிலேயே தன் புக் ஷெல்பில் அவள் வைக்க போக……..
“திறந்து பாரேன் தேவி…”மயிலிறகால் வருடியத்தை போல..மென்மை குரலில்.

யப்பா…செம்ம குரல்…..வாவ்…..ஆளு ஹல்க் மாதிரி பல்க்கா இருந்தாலும்….சாப்ட் வாய்ஸ் சிலாகித்துக்கொண்டாள்….நான் தான் அவன் கூட நின்னா எலி மாறி இருப்பேன்….உயரம் ஹை ஹீல்ஸ் போட்டுக்கலாம்….ஓகே….அகலம்?????
நான் வெயிட் ஏறனும் போல இருக்கே…ஐயோ விடிஞ்சா….9 நாலு தான்…..டைம் இலயே…..மனம்….ஒரு திரை தொட சங்கிலி தொடராய் ஓடும் கணினியாய்…..வேகம் செல்ல…

அவன் இவளை வேடிக்கை பார்த்து…..
பாலை குடிக்காமல் வைத்திருக்க…

“சாப்பிடுங்க….” சிவா என்று நேரில் சொல்ல தயங்கினாள்….

கொஞ்சம் ஆறட்டும்….சூடா குடிப்பதில்லை….

அவள் இயல்பாய்…இருங்க ஆத்தித் தரேன் என்க….

“இருக்கட்டும் தேவி….ப்ளீஸ்…”

அவன் ஆறட்டும் சொன்ன வார்த்தைகளில் கவலை கொண்டாள்…

இரவு…
தனிமை…
அவன்….உரிமைக்காரன்…
ஆள் தான் பனை மரம் மாதிரி வளர்ந்திருக்கான்…
கொஞ்சம் கூடலாஜிகல் சென்ஸ் இல்லை…” மனதுக்குள் கடுப்பாக…

இந்த கவரை திறந்து பாருங்க தேவி”

ஒரு பெரிய சாக்லேட் பார் இருக்க……நாலு நாள் சாப்பாடு வேணாம்….இதுவே போதும்…வாவ்….

நெக்ஸ்ட் ஒரு பாக்ஸ்…
.திறக்க மலைத்தாள்…
தோரணமாய் அடுக்கடுக்கா சங்கிலி கோர்க்கப்பட்ட பெரிய கனமான கொலுசு…..நிறைய முத்து வைத்து…!
பார்க்க மிக அழகாக இருந்தாலும்….இதை இந்த காலத்தில் போடுவதை நினைத்து கூட பார்க்கமுடியாது….மனதில் ஓட…

“நான் தான் வாங்கிட்டு வந்தேன்….பிடிச்சிருக்கா????”
‘ஓ….துரை அதுதான் லேட் போல’

அவனை மாதிரியே….கொலுசும்….ஹல்க்கு…..ஹாஹா….

விழிக்குடைகள் விரிய வியந்த அவள் பாவனையில் தொலைந்தான்…சிவா…

முதன் முதல் வாங்கியிருக்கான்….போனா போவுது….

அவன் மனது நோக வேண்டாமே என்று…

செம்மையா இருக்கு…… இவள் பொய் சொல்ல…. 
அவன் முகத்தில் அத்தனை விகசிப்பு….

“நைட் மட்டும் போட்டுக்கோ ….”

‘ஹா’

தானாய் இவள் உதடு பிரிந்தது…..டேய்…கேடி….

அட்ரா சக்க…அட்ரா சக்க….மனம் அவனை பாராட்ட…

வெரி போல்ட் ஸ்டேட்மெண்ட்…..வார்தைக்குள் ஒளித்து
தன் ரகசிய ஆசை சொன்னவன் மேல் ….சத்தியமாய்……இந்நொடி காதல் வந்தது…….……எந்த பந்தாவும் இல்லாமல்….

இவள் அவன் வார்த்தைகளின் தாக்கதில்….உ றைந்து நிற்க……
அநேரம் பாலை குடித்து விட்டு….

“எப்ப அம்மாவும் ரவியும் வருவாங்க தேவி” அக்கறையாய் கேட்க….

“இவன் தானா நைட் மட்டும் போட்டுக்கோ சொன்னவன்”
சந்தேகம் வந்தது….

“நாளைக்கு நைட் 8மணி போல வந்துடுவாங்க” முறுவலிதாள்….

“வரியா? என் வீட்டுக்கு ……இங்க தனியா இப்பிடி விட்டுட்டு போவ மனசு வரல….”
“என்ன மனுஷன் இவன் !!!!” ஆச்சர்ய பட்டாள்…

“பயமே கிடையாது….வருஷ கணக்கா பழகிடுச்சுங்க….எனக்கு இப்படி தனியா நாள் கிடைக்கிறது அதிசயம்….ரொம்ப பிடிக்கும்….நல்லா என்ஜாய் பண்ணுவேன்….நோ.. ப்ரொப்ளம்….இப்ப படுத்தா 11 மணிக்கு தான் எழுந்துப்பேன்….ஆவ்வ்”
அவனை கிளப்ப….வராத கொட்டாவியை விட்டாள்…
“சரி…… தூங்கு….ஹெல்ப் வேணும்ன்னா கால் பண்ணு…”

தலையை அவள் ஆட்ட….

முன்பு பூட்டிய வரிசையை இவள் திறக்க முயல….

“ஏன் தேவி…..நீயும் ரவியும் என்னை பற்றி என்ன நெனச்சிருக்கீங்க????” 
சிவா கேட்ட கேள்வியின் தாத்பரியம் புரியாமல்…
“பார்டன்….என்ன கேட்டீங்க? ”
சொன்னான்…
‘இதற்கு இவள் எப்படி பதில் சொல்லணும்…நான் உனக்கு வாழ்க்கை கொடுக்கிறேன்…சொன்னதையா..
ரவி வேண்டாம் என்று மறுத்ததையா? ….
எதை சொல்லுவாள்… ….????
இருவருமே ஒரு அப்பாவியய் உபயோக படுத்தியிருக்கிறோம்…உண்மைஅறைய….”பேச்சின்றி நிற்க…
அவளின் சிலை போன்ற பிரதிபலிப்பில் ….
பதிலே வேண்டாம் ….விட்டுவிட்டான்…
பின்பு சாதரணம் போல……..
“பொய்சொல்லி உங்க வீட்டுக்கு வந்ததற்கு சாரி தேவி..பத்திரமா இரு போயிட்டு வரேன்….”
பின் வாசற்படியில் இறங்கிவிட்டான்..
இவளுக்கு தான் என்னவோ போல் ஆகிவிட்டது….அவனை மனகலக்கத்தோடு விட பிரியமில்லாமல் ……
“சிவா..ஜஸ்ட் உள்ள வாங்களேன்.. இங்க பேச முடியாது…உங்க கிட்ட சொல்றத சொல்லிரேன்….” தயங்கி அழைக்க….
ரெண்டு எட்டு வைத்தவன்….திருப்பி வர….மகிழ்ந்தாள்…
அருகே வந்தவன்..
“எதுவும் பேசவேணாம் ..பரவால்ல விடு….போய்ட்டுவரேன்..பத்திரம்…பை…” நகர போக…
அவன் நரம்போடிய வலிய ஒற்றை கையை உரிமையாய் பற்றி வீட்டிற்குள் இழுத்து போட்டாள்…

“சரி..பேசவேணாம் தனியா இருக்க பயம்ம்மம்மா இருக்கு …கூட இருங்க…”கதவை பூட்டிவிட்டாள்….சாதித்து கொண்டாள்…
சிவாவுக்கு அவளின இச் செயல் கோபத்தை குடுக்க …
“இங்கு இருப்பதா???” திகைத்தான்….
சிறிது நேரத்திற்கு முன், இவளிடம் விடை பெறும்போதுகூட ” வா என் வீட்டுக்கு” என்று அழைத்தானே???தவிர..
இங்கேயே இருக்கணும் தோணலை….
ஆனால் அந்த சூத்திரத்தின் படி….
இவள் சொல்வதும் அவன் சொன்னதும் சமமே !!!!
‘நம்ம சபதத்துல கூட வரலே….’அது நினையாமல்..
“ஏற்கனவே ரவி என்னை “பொறுக்கி ” “தான்தோன்றி” “தறுதல” சொல்லத்தான் இல்ல… ஆனா வச்சி செய்யுறான்..இங்க இருந்தா முடிவே பண்ணிடுவான்..என்ன விடு தேவி நேரம் காலம் தெரியாம விளையாடுற…..விடு ..போறேன்…
தவித்தான்…
“சாவி தா…தேவி” குரல் உயர்த்தி கண்டிக்கும் குரலில்….!
“தரேன் …போங்க…ஆனா நீங்க போன பின்னாடி பூட்டிக்க மாட்டேன் …..அப்டியே தூங்க போயிருவேன்….பரவால்லன்னா போங்க…” சாவி யை தந்து விட்டு ….கண்கலங்கி நின்றாள்….புது புது உணர்வுகள்….அவள் அறியாதவை….அவனுக்காக மட்டும் எழும்ப….
அவள் வார்த்தைகள் சொன்ன செய்தி ….பிடித்தமில்லாமல் இருக்க… செய்வதறியாது நின்றான்….
“எப்படியோ போ “ன்னு விட மாட்டான் ….மனசு வராது….
சாவி இந்தாங்க….கொடுத்தாள்
வேண்டாம்….அவன் வாங்க மறுக்க …திணித்து
“இதோடா ..பூட்டிட்டு வாங்க….எத்தனை தடவை , நானே திறந்து மூடி…ஸ்ஸ்ஷப்பா…முடில…அதனால நீங்களே லாக் ஓகே வா…”
அதிகாரமாய் வேலை வாங்க….
ராங்கி ….முணங்கி பூட்டினான்….என்னா அடம் பிடிக்குரா???
வேடிக்கை பார்த்தவள்..
அவனிடம் சாவியை வாங்கிக்கொண்டு…
அவன் முன்பு அமர்ந்திருந்த அறையை காட்டி, “போங்க… இப்ப வந்திரேங்க…..” துள்ளளோடு வேறொரு அறைக்கு போனாள்….
இவனும் முன்னிருந்ததை போல சேரில் அமர்ந்து…..
‘ஏன் வந்தோம்??….வருத்தப்பட்டுக்கொண்டான்….முன்பின் இயல்பு மீறி பழக்கம் இல்லை..இன்று தான் செய்திருக்கும் காரியம்….
யாருக்கும் தெரிந்து கேட்டால் பதில் சொல்லவே முடியாது….அசிங்கம்…இவன் மனம் யோசனையில் மூழ்க……
ஸ்ரீ வந்தவள்… ரவியின் கைலியை கைகளில் தந்தாள்….
“அதுதான் ரெஸ்ட்ரூம் போய் பிரெஷ் பண்ணிட்டு இத கட்டிக்கோங்க.. படுக்கலாம்…நான் வெளில இருக்கேன் டிரஸ் மாத்திட்டு கூப்பிடுங்க…”
ரெஸ்ட் ரூம் நோக்கி இவன் நடக்க..கையில் அவனின் கொலுசை எடுத்துக் கொண்டு வெளி சென்றாள்… அவன்உடை மாற்ற எடுத்துக்கொண்ட நேரத்தில் இவள் டைனிங் அறையில் இருக்கும் சேரில் அமர்ந்து வாகாய் ஒரு காலை இன்னொரு காலின் போட்டு பழசைகழட்டி விட்டு அவனின் பல்க் கொலுசை போட்டு கொண்டாள்..
,அவனை ஹப்பியா வச்சிக்கணும் ..சோ ஸ்வீட் சிவா…பொசுக்கு பொசுக்குன்னுபீலிங்ஸ்ஆகிடுற…போடா..,
கொஞ்சிக்கொண்டாள்… நடந்தால் கொலுசொலி காட்டிக்கொடுத்துவிடும்… ..நோ….தன் பாதத்தை மெதுவாய் தரையை தேய்த்த வண்ணம் ஊர்ந்தாள். ..இப்படி ஓர் அனுபவம் அவளுக்கும் வந்ததில்லை…சிரிப்பு வந்தது…சிவா வுக்காக எனும் போது சுகமாகவும் இருந்தது……
முதலிரவு அறைக்கு தயங்கி தயங்கி செல்லும் மணமகளின் நடையை ஒத்து இருந்தது…அவளின் நடை…
அதே நேரம் வேண்டாத விடிவிளக்கை கூட அணைத்து தூங்க தோது பண்ணினாள்…வீடு திருப்தி தர. …தன் அறையின்
கதவை தட்ட …திறந்து விட்டான்…
அவன் போட்டு வந்த டீ ஷர்ட்டோடு ரவியின் லுங்கியுமாய்…தன் வீட்டுக்குரியவன் போல பாந்தமாய் இருந்தான்…வாவ்…
‘எது போட்டாலும் அபாரமா இருக்கு..சிவா’ ரசித்தும் கொண்டாள்..
“இங்க பாருங்க சிவா ..நல்லா இருக்கா???நீங்க வாங்கி தந்த கொலுசு!!!!”
தன் சுடியின் பாண்ட் யை லைட்டா தூக்கி காட்டி கேட்க……
பார்தவன் …முகம் பூவாய் மலர…ஆசையாய் அப்பாதங்களை பார்த்தான்….போட்டு காட்ட சொல்ல முன்பே சொல்ல ஆசை ஆனால் கூச்சப்பட்டு சொல்லவில்லை…
“தேங்க்ஸ் தேவி…”
“அத நான் சொல்லணும்…”அசால்டா பதில் தந்தாள்..
அவனுக்காக….மெதுவாய் நடந்தும் காட்டினாள்.. …
“வேறென்ன பிடிக்கும் உங்களுக்கு….”சும்மா தான் கேட்டாள்… பேசணுமே எதாவது என்று….
“இப்ப நீ வச்சிருக்க பூ ….உனக்கு எவ்ளோ அழக தருது தெரியுமா? லைக் ஏஞ்சல்…இதோடு சாரி கட்டியிருந்தா செமையா இருந்திருக்கும்….இன்னும் கண்ணாடி வளையல் ,கொஞ்சம் பெரிய சைஸ்மெரூன் பொட்டு…அப்புறம் இப்டி சின்னதா இல்லாமல் குடை ஜி்மிக்கி மாதிரி போட்டிருந்தியேன்னா…. உன் கண்களோடு அதுவும் அசைந்தால்…
கவிதை……இப்படியெல்லாம் இருந்தா ரொம்ப ரொம்ப பிடிக்கும்…தேவி….ஆனா …
யப்பா …ஆளப்பாரு…ஒரு நிமிஷம்…இடையிட்டு..
“மை யும் மஞ்சளையும் விட்டுடீங்க”
“ஓ..அது தெரியாதே…” அப்பாவியாய்
இது மட்டும் எப்படி தெரியுமாம்…எதாவது மாரியம்மா..முனியம்மாவை சைட் அடிச்சிருப்பான்…காண்டானாள்…
“இதெல்லாம் எப்படி தெரியும்….” அவனை நக்கலாய் கேட்டாள்…
இப்படித்தான் இருக்கணும் சொன்னால் சரிதான் போ….தாண்டி விட்டு செல்லும் ரகம் இவள்….
இவனின் இந்த சராசரி ஆசை நாகரிகமாக வாழும் அவளுக்கு வேப்பஞ்சாறு….
“கல்யாண ஆல்பத்துல எங்கம்மா இப்படித்தான் இருப்பாங்க….தேவி..!! நீ அப்படி இருக்கணும் ன்னு எதிர் பார்க்கல….இன்னும் எதோ சொல்லி க்கொண்டிருந்தான்…

எங்கம்மா இப்படி இருப்பாங்க ..சொல்லும் அவனின் கன்றுக்குட்டி மனம்….இவளை அசைத்தது… அவனின் நிராதரவு நிலை தானும் உணர…ஏற்க முடியாமல் தவித்தாள்…அவனுக்கு எல்லாமும் தானாய் இருக்க வேண்டும்…அவனை அள்ளி அணைத்து வயிற்றுக்குள் பொதிந்து கொள்ள கன்னியுள் ஊறி கிடந்த தாயுணர்வு எழ….
மௌனமாய். …நின்றாள்..
“தேவி…..தேவி….”அவன்
என்னாச்சு…
ஒன்னும் இல்லை… நிதான படுத்திக்கொண்டாள்…
அவளுக்குள் மாறிப்போன மனா நிலையை மாற்ற எண்ணி…
அவன் வாங்கி வந்த சாக்லேட் எடுத்து பாதியை பிட்டு அவனுக்கும் குடுக்க…
“நைட் நான் இனிப்பு சாப்பிடுவதில்லை நீ சாப்பிடு!!! தேவி “…
எனக்காக ..இன்னைக்கு மட்டும் பிளீஸ்… ப்ளீஸ்கள் போட்டு கெஞ்ச..
முறுவலித்து வாங்கி உண்ணவும் செய்தான்..
“நீ தேவி???…”இவளை சாப்பிட சொல்ல…இவள் சிறிய கட்டி மட்டும் வாயில் போட்டுக் கொண்டு
“கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுவேன்…அப்புறமா…” சொல்லி N
“வாய் கொப்ப்புளிச்சிடுங்க….சிவா”வாட்டர் பாட்டில் கையில் கொடுத்தாள்.பின்
இவள் , கட்டிலை தட்டி…ஒரு செட் போர்வை தலையணையை கிழே விரித்தாள்….
“வாங்க வந்து படுங்க….”
கட்டிலைக் காட்டி சொல்ல…
“நீ அங்கு படு…. நான் கீழ படுக்குறேன்…” அவன் தயங்க..
“நோ.. நீங்க என் கெஸ்ட் சோ ஸ்பெஷல்… சொல்றத கேட்டுத்தான் ஆகணும்..ப்ளீஸ் சிவா…” ரொம்ப அடம் ரொம்ப போல…எந்த பேச்சும் கேட்கமாட்டரா!!!! பிச்சி!!!கொஞ்சிக்கொண்டு பொய் படுத்தான்….
“லைட் ஆஃப் பண்ணிறேன்…எனக்கு வெளிச்சம் இருந்தா தூக்கம் வராது….காலைல எப்ப எழுப்ப???..எதில வந்தீங்க??..”
விளக்கு அணைக்க போனவள் சந்தேகங்களை கேட்க..
“4மணிக்கு இங்கிருந்து போனா சரியா இருக்கும் தேவி.பைக் ரெண்டு தெரு தாண்டி தெரிஞ்சவங்க வீட்டில் இருக்கு…”
“ஓ…அப்ப சரி….” விளக்கை அணைத்தவள்…

“ஏசி அதிகம் வேணும்ன்னா உங்க தலையணை க்கு பக்கத்தில் இருக்கு கூட்டிக்கோங்க..”படுத்து விட்டாள்..
அவனுக்கு முதுகு காட்டி…போர்வையை நன்றாக போர்த்திக்கொண்டு….முகத்தில் விழுந்த பூவை கழற்றி வைக்க… முகம் கழுவிக்கொள்ள ஆசை வர….இவள் அசைவு அவனுக்கு தொல்லை என்று விட்டாள்…
கால் கனமாக …கொலுசு தன் இருப்பை உணர்த்த…நானா இப்படி இதை போட்ருக்கேன்…அதிசயித்தாள்…துளி மஞ்சள் கூட உடம்பில் பட கூடாது என்பாள்… பட்டிக்காடா??? அம்மாவிடம் காய்வாள்…இப்ப தான் இவ்வளவு பூவும் வைக்கிறாள்…இல்லாட்டி நோ பூ…விரும்ப மாட்டாள்…நகைகள் கூட நூலாய் இருக்கும்…அவள் ரசனை அப்படி….
அவன் ரசனை???? ஆதி தமிழச்சி!!!!
“ஏங்க …”
“ம்ம்.. ”
“நீங்களும் அண்ணனும் முன்னாடி அவ்ளோ கிலோஸ் சா இருந்தீங்க.. …இப்ப கொஞ்ச வருஷமா இல்ல ஏன் பிரிஞ்சீங்க???”
இவளுக்கு தெரியாது போல…ரவி சொல்லியிருக்க மாட்டான்…..ஹாஹா..
“அது ஒரு பொண்ணால…” மொட்டையாய் சொல்லிவிட்டு ரகசியமாய் சிரித்து கொண்டான்…
மல்லிகை வாசம் குளிர் காற்றோடு அறை முழுவதும் சுழன்று வர….இதமான உணர்வு….அப்ப நிழலின் நிறத்துடன் இருந்தவள் …பருவத்தின் பொழி்வில் மாநிறத்தில் கண்ணாடியாய் மினுங்கினாள்… கண்ணு ரொம்ப அழகா இருக்கு சிவா!!! உத்து பார்த்தா உயிரையே உறிஞ்சி விடும் போல யப்பா….அதென்ன?? மனதின் தாளத்திற்கு கண்கள் ஆடுது….இப் புதுமையை இன்று தான் கண்டிக்கிறான்…
சிவா, தேவியின் நினைவில் மூழ்கிவிட…
இவளுக்கு , எதாவது லவ் மேட்டர் ஓஓ?????யார் பண்ணினா அண்ணனா?? இவனா???
மண்டை காய்ந்தாள்.. 

“யாருக்காக சண்டை போட்டீங்க” ஆத்திரம் பொறுக்க மாட்டாதவளாய்….

“உனக்காக” ….ஹாஹா … உல்லாசமாய் நகைத்தான்….

“எனக்காகன்னா ??? புரிலே??”

அது எதுக்கு இப்படி சிரிக்கிறான்….அவ்வளோஊஊ காமெடியா????இதுல …..
“உன்ன நான் கல்யாணம் செஞ்சிக்க ஆசை படுறேன் சொன்னதால, அது உங்க அண்ணனுக்கு பிடிக்காததால…..நாங்க பிரிஞ்சிட்டோம்…..”

“அப்ப என்ன நீங்க லவ் பண்ணிங்களா????” உச்சி குளிர்ந்து….

“இல்லை…நண்பனா இருந்தப்ப…எனக்கு தகப்பன் மாதிரி நல்லது சொல்லி….சரி பண்ணான்…..அவன் சொல்றது எல்லாமே எனக்கும் பிடிக்கும்…
சரி …ரவி உறவு எப்பவும் வேணும் ன்னா உறவுக்காரனா மாறிடலாம்…..என்று தான் கேட்டேன்…”
“கேட்ட நிமிஷம்….நண்பன் ரவி….மாறி ஸ்ரீயின் அண்ணனா உருமாறிட்டான்… ஹாஹா….நட்பு பலி ஆகிருச்சு….”

தேவியோ….. லவ் பண்ணவில்லை என்ற சிவாவின் ஸ்டேட்மெண்ட்க்கு…எரிச்சலானாள்…..

சிவா ….நீ ….இவ்ளோஓஓ உண்மையப் பேசக்கூடாது…போ…
உர்ர் ர்ர்ர்…….லூசு….பக்கி…எரும….போடா…..வசவு மழை பொழிந்தாள்…..ஸ்ரீயின் சுயரூபம் !!!!

உம்மென்று இருந்தாள்…

இருட்டில் அவனுக்கு அவள் மாற்றங்கள் தெரியாததால்….
விட்டதை தொடர…

“வெறி வந்துச்சு….அந்தஸ்தா….மரியாதையா வாழணும்…வளரனும்…என்று…
தாத்தா வீட்டை வித்து பாதி பேங்க் ல டெபாசிட் பண்ணினேன்….மிச்சம். ..ஒரு சின்ன ஜிம்…..வச்சிட்டு …கிரீன் சிட்டி..ல ஒரு அபார்ட்மெண்ட்..எடுத்துட்டு…சுதந்திரமா இருக்கேன்….தேவி…
ரவி..நீ என்ன கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறதா சொன்னான்…..அது தான் அதிசயம்….எனக்கு…இத கேக்குறதுக்கு தான் நான் வந்ததே…..”

அவன் இவள் பேச …..அமைதி காக்க…அவன் பக்கம் இவள் இப்ப தான் திரும்ப….அவன் இவள் பக்கமே பார்த்திருந்தான்……

“முதல்ல நிச்சயம் பண்ண மாப்பிள்ளை பத்தி சொல்லவா???”
அவனுக்கு சூடு காட்டினாள் வேணும் னே….

“வா …பக்கி வா…நானும் உண்மைய சொல்றேன்..எரும….” தாங்குரியா….. பாப்போம்…

“கேடி கைஸ்….’

“ச்சே ச்சே…அத பத்தி வேணாம்…” பதறினான்…

‘அஅது…..’

உள்ளதை சொல்ல ஆரம்பித்தாள்….

உங்கள பத்தி, உங்க முன்னேற்றம் பத்தி அண்ணன் எதாவது அம்மா கிட்ட சொல்லிட்டே இருப்பான்….உங்க அம்மா அப்பா குடும்ப தகராறுல…..சூசைட். ….பண்ணிகிட்டாங்கன்னும்…
அப்ப உங்களுக்கு மூணு வயசுதான்னும்..ரொம்ப பீல் பண்ணி பேசுவான்….நீங்க டச் ல இல்லாதப்ப கூட…பரவால்ல…நல்ல செய்றான்…தேறிட்டான்…அப்படின்னு லாம் சந்தோசப்படுவான்…

“ஓ….தேங்க்ஸ்….தேவி….நிஜமா சந்தோசமா இருக்கு இத கேட்க….” அவன் புளங்காகிதம் அடைய….

காண்டானாள்….பக்கி….

ரவிக்கு இப்படி ஒரு அடிமையா????!!!!!
ஓவர்…
ஓவர்…
ஓவர் — ஓ — ஓவர்…. நொடித்துக்கொண்டு..
பேச்சையும்தொடர்ந்தாள்………

“மாப்பிள்ளை வீட்ல சட்டமா வரதட்சணை கேட்கவும்…
எனக்கு கல்யாணத்து மேல வெறுப்பே…வந்துருச்சு….நானும் ரவியும் அந்தாளப் பத்தி வாதம் பண்ணிய போது தான்….

எனக்கே தோணுச்சு….நான் தேடின எல்லா தகுதியும் உங்க கிட்ட இருக்கு….அப்படிக்கறது….சிவா கிட்ட கேளுங்க …என்று சொன்னேன்…
அவ்ளோ தான்…ஸ்டோரி திருமண நாள் வரை வந்துவிட்டது….”

“அவனுக்கு பிடிக்காதே….எப்படி உடனே வந்தான்….”

“இப்ப உங்கள வீட்டுக்கு உள்ள வர வச்ச டெக்னிக் தான்….” கேலி செய்தாள்…

“சிவா….இல்லாட்டி சேவை…என்று சொன்னேன்….”ஓடி வந்துட்டான்….

அவனே ஒரு லூசு…அவனைப் போய் என்னவோ பவர் ரேஞ்சர் மாதிரி பில்டப்….குடுக்குறீங்க….முடில சிவா….ஹாஹா…

அண்ணனையும் சிவாவையும் சேர்த்து ஓட்டி கலகலவென சிரிக்க……

“அன்பு தங்கைகளுக்கு பாச அண்ணன்கள் எப்பவும் லூசு தான்……” நிதர்சன விதி !!!!
இங்கு கொள்ளப்பட்டது…

இவனும் கூட சிரித்தான்….மனம் விட்டு…

இடையிட்ட அமைதி…..மனங்கள் பேச வழி விட….
மறக்க முடியாத இரவாய் ….
இவ்விரவு மாறியதை இருவருமே உணர்ந்தார்கள்…

மேலே என்ன பேசுவது???? தெரியவில்லை….
கேள்விகள் தீர்ந்ததா?? தெரியவில்லை…
வார்த்தைகளுக்கு தான் பற்றாற்குறையா??? ஏனோ….

காற்றில்லா பூமி போன்று
ஓர் மௌனம்…..அவ்வறையில் ஓட……

இன்று மட்டும் ….
இரவு நீளட்டுமே…… ஓ …பகலே !!
இந்த நாள் நீ வேண்டாமே!!!
ஓய்வெடேன்…

இப்படிக்கு ஸ்ரீ…..என்னவனுக்காக…. 
“உங்களுக்கு ஏ ஸி கூலிங் போதுமா???”
“சரியாத்தான் இருக்கு….ஏன் தேவி”
அவள் போர்வையை காதுவரை போர்த்தியிருந்தாலும்…போர்வையை தாண்டி குளிர் நடுக்கியது…..உஷ் உஷ் உடம்பை குலுக்கினாள்…
எனக்கு குளூருது…. அசடு வழிந்து…!
அப்ப குறைச்சிடு தேவி..இல்லாட்டி வேணாம்…அக்கறையாய்
வேணாம் …வேணாம்…ரெண்டு பாயிண்ட் மட்டும் குறைச்சிக்கிறேன்…. போதும்…
கெஸ்ட்ட ரொம்ப சிரமப்படுத்துறேன் ல……
ரிமோட்காக எழுந்தவள்..விளையாட்டாய் கேட்க…
நான் உனக்கு இன்னும் கெஸ்ட்டா??? பதிலுக்கு எதார்த்தமாகத் தான் கேட்டான்…
ஆனால் இருட்டில் அசையாமல் நின்றவளின் அமைதி…வெட்கப்படுறா….போல…
அவ வாய் வழியே கேட்டு விடுவோம்…..
“நான் யாரு தேவி உனக்கு??? ”
“நீங்க யாருன்னே தெரியாது…சிவா”
குண்டை போட்டாள்….
அடிப்பாவி ..!!!

இவன் திகைத்த போதே……

“ஆனா நான் உங்க பொண்டாட்டி….ஓகேவா? சிவா” கலகலவென சிரித்தாள்…
குறும்பு செய்து வெட்கத்தை அதனுள் மறைத்தாள்…
“பொண்டாட்டி ”
என்ற சொல்லில் அவனுக்கு நிறைந்து ததும்பி மனம் வழிந்தது…
கூலிங் குறைத்தவள் தன்னிடத்தில் படுத்துக்கொண்டு….
“ஜிம் ன்னா ஜெண்ட்ஸ் க்கு மட்டுமா??” சும்மா விவரம் கேட்டாள்
“ரெண்டுபேருக்கும் தான் தேவி”
“ஓ……”
லேடீஸ் வரதால நல்ல ரீச்…என் ஜிம்முக்கு…
“ஓஓஓ……..” ராகமாய் ….
ஓ பொறாமையில் வெந்து ஆவியாக வெளிவர…
அது தெரியாத அப்பாவி சிவாவோ… இவள் கதை கேட்கிறாள் என்று நம்பி…..
மேலும் தொடர்ந்தான்….

“என் ஸ்டுடென்ட்ஸ் சொல்வாங்க…..மாஸ்டர் உங்களுக்காகவே வர்றாங்கன்னு…மெய்யோ? பொய்யோ?…தெரில….கலாய்க்கிறாங்கன்னு நெனைக்கிறேன் தேவி…”
பொசு பொசுன்னு…தேகம் முழுக்க ரோமம் சிலிர்க்க…அவனுடன் சண்டை போடும்…முடிவுக்கு வந்தாள்…

ஐ வான்ட் விவரம்??? அதுவும் இப்படி…சிலிர்த்து..சண்டையிட….
கனத்த காரணம் வேணும்.. மனசாட்சி கேக்க….
இதோ கிரிமினல் வாயாலேயே சொல்ல வைக்கிறேன்…கருவினாள்..
“ஏனாம்…எந்த லேடியும் அசத்தலையா???”
அதனால ….ஐயாக்கு பீலிங்ஸ் ஓஓ …..” கிண்டல் தொனியில் கேட்டாள்…
வேணும்னே…
மனதின் மெய் செக்ஷன்…
ரிசல்ட் பொறாமை தான் …
ஹை லெவல்…என்றது….
ஹாஹா….
பாவம் இப்ப சிவாவுக்கும் ரிசல்ட் தெரிந்திட…
அவளின் சிறுபிள்ளை தனத்தை நினைத்து வாய்விட்டு சிரிக்கத்தோன்ற….
பாதியாய் அடக்கி சிரித்தான்…
“தெரியல தேவி….பொண்ணு ன்னு நெனச்சா..நீ மட்டும் தான் கண்ணுக்குள்ள தெரிஞ்ச….” இயல்பாய் சொல்ல…
“பொய் ..பொய்.. …லவ் பண்ணல ன்னு சொன்னீங்க???”
“ஆமாம் …இப்பவும் சொல்றேன்…அதுவும் உண்மைதான்…இதுவும் உண்மை தான்…”

“ரவி கூட பிரிவு வந்தாலும்….ஆசை பட்ட முதல் பெண்ணிடமிருந்து என் கடிக்காரமுள் நகரவேயில்லை…….”
‘இதென்ன அந்நிய பாஷை பேசுறான்’

“புரில… ” அவள் விளங்கிக்கொள்ள முடியாமல் முகம் சுருக்கி கேட்க…
“எப்படி சொல்றதுன்னா …”
“நாம அப்ப ரொம்ப இனொசென்ட இருப்போம்….
அப்ப ஒரு ஓவியம்….இல்ல ஒரு அழகிய பொம்மை…பிடிக்குது….ரொம்ப பிடிக்குது….
அழகியல் கோட்பாடு தெரியாமலே…
நாளாகுது வளருகிறோம்…இப்ப எல்லா கோட்பாடும் தெரியும்….இது நல்லது…இது கெட்டது… பகுத்றிகிறோம்…..இப்ப முழுமை பெற்றுவிட்டோம்…
திருப்தி ….
ஆனாலும்…முதன் முதல் என் ரசனை அப்படியே இருக்கிறது….எத்தனை முகங்களை பார்த்தாலும் அதில் உன்முக வடிவை தேடும் …அந்த முட்டாள் தனமான ரசனை….
அதுவே எனக்கு கவசமாக இருந்தது….நிஜமாவே…யாரும் உன் போல் என் கண்களை கவரவில்லை தேவி…எந்த மெனக்கெடல்களும் இல்லாமலே…
இந்த விஷயத்தில் நான் ஸ்ட்ரோங் என்பதால்..எங்க அப்பாட்மெண்ட் ல எனக்கு நல்லவன் ன்னு பேரு…”
இவளை நினைந்திருந்தான்… இவளை கூல் ஆக்க..
“அப்ப இது லவ் தான்….”
“இல்ல…”
“இப்போ இவ்ளோ சொன்னிங்க??
“உனக்கு புரிய வச்சேன் வித்தியாசத்தை…..”
அட போயா!!!! விட்டு விட்டாள்…
“நல்லவனை சும்மா விட மாட்டாங்களே?…” உதடு வளைய அலங்காட்டி….
“உண்மை தான்…பேச ட்ரை பண்ணுவாங்க…சுள்ளுன்னு கோபப்படுவேன்…அப்புறம் என்கிட்ட வரமாட்டாங்க… ஜிம் லேன்னா மேரேஜ் ஆன லேடியை ட்ரைனர் ஆக்கியிருக்கேன்…அவங்க பார்த்துப்பாங்க……அவங்களை மீறி பேச வந்தா…ரொம்ப மரியாதையை பேசி பேசுவேன்……போயிருவங்க…
இன்னொன்னு நன் எப்பவும் தனியா இருக்க மாட்டேன்….
எப்பவும் என் கூட யாராச்சும் பிரின்ட்ஸ் இல்ல ஸ்டுடென்ட்ஸ் இருப்பாங்க….தேவி…” 

தவமென…. தனிமையிலும் சுய கட்டு பாடோடு இருந்தவனின்பால் துளித்துளியாய் சேர்ந்த காதல் நதியென பெருகி நிரம்பி வெள்ளமாய் பாய்ந்து பரவி ஈரமில்லா இடங்களையும் நனைக்க….கட்டிலில் மல்லார்ந்து படுத்திருந்த தன்னவனின் வரிவடிவை கனிந்து காதலாய் உற்று நோக்கினாள்…ஸ்ரீ…

அவனை அடைவதில் கர்வப்பட்டாள்…எதோ ஓர் பேரலை….

“” ஓடி , அவன் மேல் ,உருண்டு பிரண்டு , உச்சிமுடியை பிச்சி இழுத்து நோக வைத்து ….கன்னத்தை கடித்து…எனக்கே எனக்கா நீ…இச்சு ….இச்சு …இச்சு…. மூச்சு விடாமல் முத்தமிட்டு…..ரத்தம் வர கடிச்சி…
“ஐ லவ் யூ டா தடியா “ன்னு காதில் கத்தும் …அளவு அரக்கத்தனமாய்…. ராட்சசத்தனமாய்….ஆசைப்புயல் இவளுள் சூறாவளியாய் சுழட்டி அடிக்க…
பெண்மையின் வேர்கள் பலம் இழக்க…வினோதமாய்…
வெளியில் வெட்கத்தில் வேர்த்தாள்…..அக்காதல் ராட்சசி…
அந்த பிளாக் & வைட் மனசனை வண்மையாய் நேசித்தாள்..!!!
டேய்…நீ என் ஆளுடா…

இது வெறி நாய் எபெக்ட்….. மனம் லேட்டா கமெண்ட் சொன்னது….

போடி…பக்கி… ஆமாம் நான் ரொம்ப பெரிய பயங்கர வெறி நாய் தான்….ஹாஹா…

இச்சு …இச்சு….முத்த வெல்லம் காய்ச்சினாள்…

மனதுக்குள்….

“9நாள் போவட்டுண்டி….என் கிட்ட மாட்டி நீ படுற பாடு இருக்கே….’

என்னென்னா செய்யலாம் லிஸ்ட்..அன்பு லிஸ்ட்..ஈஈ ஈஈ….
போட்டாள்…..ஈஈஈ. அயோ பாவம்……ச்சோ சுவீட்….இடையில் சொல்லியும் கொண்டாள்…
மொதல்ல வேலைக்கே விடக் கூடாது…..
நாள் பூரா என் கூடவே இருக்கணும்…..”

‘பூவா’ வுக்கு என்ன பண்ணுவீங்க???”

….வுக்கும்…ரவி சம்பாரிச்சி தருவான்….
மனசாட்சியிடம் மன சாட்சி இல்லமாலே பதில் பேசினாள்..
அப்புறம்….
பேசணும்…பேசணும்…பேசிக்கிட்டே இருக்கணும்…..
என் கூடவேய் நாள் பூரா இருக்கணும்….வெளியில் போக ஆசை பட்டால்…விடமாட்டேன்….
சிவா உன் துணிகளை ஒளித்து வைச்சுப்பேன்… எப்படி போவியாம்…… .ஹாஹா….
நகைத்துக்கொண்டாள்….
காதல் பாட்டுக்கள் தினமும் பாட வைப்பேன்…ம்ம்ம்
ஸ்டாப் ஸ்டாப்….
ஒரு சின்ன டவுட்டு…சிவா கிட்ட மொதல்ல சத்தியம் வாங்கிக்க….ஈஈ ஈஈ..
அப்புறம்…இதெல்லாம் வன்கொடுமை …ன்னு நெனச்சிக்க போறான்..

உடனே….

“சிவா …தூங்குறீங்களா????”

“ம்ம்ம்…”

“தொந்தரவு செய்றேனா??? ஒரு ரெக்வஸ்ட்….”

“இல்ல…. சொல்லு தேவி”

“கல்யாணத்துக்கு அப்புறம் …நீங்க எப்பவும் கோபமே படவே கூடாது…”

“எனக்கு அவ்ளோவா கோபம் வராது தேவி….அதுவும் உன் மேலயா….நெவர் டா…”
.
அடிரா அடிரா நாக்கு முக்க நாக்கு முக்க… பாட்டு ஒலிக்க…மனம் ஒற்றே ஆட்டம்….போட்டு குதிக்க…

எப்போதையும் விட….
இன்று தான் மிக மிக சந்தோசமாய் இருப்பதாய் உணர்ந்தாள்….

“நான் எதாவது தெரியாம செஞ்சுட்டேன் பெரிய மனுஷனா மன்னிச்சுடனும்….சரியா???? “வேணும்னே மிக குழைந்த குரலில் …

“”இதோடா …தெரியாம எதாவது செய்வோமா??…..தெரிஞ்சே செய்வேன் …யான குட்டி…..ஹாஹா…”சாரி ” யே தப்பு பண்ணலாம்…. எங்குறதுக்கு லைசென்ஸ் தானே…..ஹாஹா….”

“செம்ம “வசனம்…பேசினாள்….

“ச்சே ச்சே….நீ பேபி டா…. நான் அன்பா வச்சிக்கிறேண்டா….பீல் ஆகாத….” எதோ பயத்தில் இப்டிலாம் பேசுகிறாள் என்று…
ஓரு பிசாசுக்கு ….ஆதரவு கொடுத்தான் அந்த தேவன்….ஹாஹா….

“சரி தூங்கலாம் சிவா…”
நல்லப்பிள்ளையாய்….

தேவிக்கு …
அவனை எப்படியெல்லாம் “அன்பு” செய்யலாம்….
மொதல்ல உரு போட்டது……மறந்து போக….

த்தே….அத்த வுடு..மே….புச்சா போடு…மனம் கேவலமாய் மிரட்ட…

ஹுக்கும்…வேலைக்கு விட கூடாது…துணி லாம் ஒளிச்சி வச்சிட்டு…ஜிம்போடியயோடவேய் அலையணும்…. அப்புறம்…ம்ம்ம்…என்ன பத்தி பாடிட்டே இருக்கணும்…எந்த “அன்பு” மாறினாலும்…இது மாறாதது….சிவாவ பாட வைக்கிறோம்……eeee…நிறைய பிள்ளைகள் வித விதமான பெத்துக்கணும்….யார் பாத்துப்பா???..யார் ஸ்கூல் பீஸ் கட்டுவா???…
எகனை பேசிய மனத்தை…. இப்ப தான அன்பு பண்றத … யோசிக்கிறேன்….பின்னாடி சொல்றேன் யார் யார் ன்னு… போ….பக்கி…..வேலையக் கெடுத்துகிட்டு….விரட்டி விட்டாள்… அந்த காதல் கண்ணாட்டி……

சூப்பர் …….கல்யாணத்தப்ப நம் தேர்ந்த அடிமைக்கு …இந்த ஷரத்தையெல்லாம் ஒரு பேப்பர் ல எழுதிக் குடுத்துட்டு…இதெல்லாம் இருக்கும்….புரியஞ்சிக்க வச்சீரனும்…நேர்மை…அது எப்பவும் ஸ்ரீ கிட்ட உண்டு….சிலாகித்தும் கொண்டாள்…

இன்னும் என்னென்ன சேர்க்கலாம்…”அன்பு” விட்டு போயிரக்கூடாதுல….
ம்ம்ம்ம்….ஹாங்… உப்பு மூட்டை தூக்கணும்…
வேறென்ன எனக்கு பிடிக்கும்….டான்ஸ்…

நான்
எந்த பாட்டு போட்டாலும் டான்ஸ் ஆடனும்….அவன் கரணை உடம்பை நினைத்து …பார்த்தால்…. அவன் ஆடினால்…பிள்ளையாரப்பா!!!! பார்க்கவே முடியாது….இது எனக்கு அன்பு….அடி போடி….
கிறுக்கச்சி….ஹாஹா…
சிரிப்பு பொங்கி பொங்கி வர….அடக்கமாட்டாமல்…சிரித்து விட்டாள்…..

“என்ன தேவி….என்னாச்சு???”

‘ஐயோ சாமி…மாட்டினேனா???’

“Eeee….fb மீம்ஸ் நியாபகம் வந்துச்சு…வேறொன்னும் இல்ல…உங்களுக்கு டான்ஸ் ஆடத்தெரியுமா?”

முட்டாள் தனமாய்….

“டிவி யில் கூட பார்க்க மாட்டேன்…ஏன் கேக்குற….”
எனக்கு பிடிக்கும்…வழிந்தாள்….
உங்களுக்கு சிக்ஸ் பாக் இருக்கா???

எதோ கேக்கணும் என்றே கேட்டாள்…

சும்மா இருந்தால் அவனை “அன்பு” செய்ய 1000 வழிகள் ……

புதுசாய் காதல் செய்யும் பித்து மனம் சொல்வதை …..அப்புறம் கேட்டுக்கலாம் விட்டு விட்டாள்… இன்னும் 9 டேஸ்…. இருக்கே……..சரியா???

விடியும் வரை …சிவாவிடமே பேசி நல்ல படியா கிளப்பி விட்டுட்டு நாள் பூரா தூங்கணும்…..நினைத்தாள்…மெய்யாவே….. 
அவர்கள் இருந்த அறை… ஏஸியின் நீல நிற நியான் எழுத்தின் சன்ன வெளிச்சத்தில்…ஒருவர் உருவை ஒருவர் காணலாம்…என்கிற அளவில் கண்கள் பழகி இருந்தன….
“உங்களுக்கு சிக்ஸ் பாக் இருக்கா???”
தேவியின் கேள்வியின் தாக்கத்தில் தானாகவே
எழுந்து உக்கார்ந்தான் சிவா…….
அவனை பற்றி ஏதும் அறியா…
கன்னிப்பாவையவளின் அறியாமையை கண்டு ரசித்து புன்னகை சிந்த….
அதை அறியாத ஸ்ரீ …

‘ஏதாவது தப்பா கேட்டுட்டோமோ…மனசு வருத்த படுறமாதிரி…’ அவனை சமாதனப்படுத்துவதாய் எண்ணி…

“இல்லேன்னாலும் பரவால்ல..நான் ஜஸ்ட் கேட்டேன் அவ்ளோ தான்” அவளும் எழுந்து அமர்ந்தாள்…அவன் எழுந்து விட்டதால்…

இவளின் ஆறுதல்….அவன் புன்னகையை விரிவாக்கி..உரக்க கலகலவென சிரிக்க வைக்க….

“சம்திங்…பிக் பல்பு டி”

உணர்ந்தவள்…. தோல்வியை பொறுக்க மாட்டாதவளாய்….
“சிரிங்க ….எதுக்குன்னு சொல்லிட்டு சிரிங்க” சிணுங்க…
அவன் மேலும் இவளின் சிணுங்களையும் சேர்த்து ரசித்து சிரிக்க…..
காண்டானவள்….
சட்டென எழுந்து போய் அவன் வாயை தன் வலது கையால் பொத்தினாள்….
“என்ன வச்சி கலாய்ச்சி சிரிக்கிறீங்க….ஐ ஜஸ்ட் வான்ட் ரீசன் சிவா ப்ளீஸ்…??”
அவளின் இந்த அதிரடி தொடுகை….அவனை தொலைக்க வைக்க….

சிவாவின் மௌனத்தை அறிந்த பிறகே …

தன் தவறை உணர….

பத்து தலை இருந்தாலும்… மொத்தத்தையும் தொங்க போட்டு கொள்ளும் நிலையில் இருந்தாள் ஸ்ரீ….

ச்சீ சீ….பேட் கேர்ள்…

ஐய…. பப்பி சேம்….

சாரி….eeee வழிந்து கொண்டே …கையை எடுத்தாள்…
உள்ளங்கையில் அவன் மீசையின் குறுகுறுப்பு…..

‘கரப்பான் பூச்சிய தொட்டமாதிரி இருக்கு….’

மெய் சிலிர்த்துக்கொண்டாள்…..

ஆனாலும் …விடக்கூடாது…..எப்படி சிரிப்பான்???

இடுப்பின் இருபுறத்திலும் கை வைத்து….

“ரீசன்..சொல்லுங்க…அப்பத்தான் படுப்பேன்….” கீச்சு குரலில் மிரட்டினாள்…பிறவி அடம் பிடித்து….

“வா இங்க ..” அவன் அழைக்க…..

சலங்கை ஒலிக்க வந்தவளை…. கைப் பற்றி…..தன்னருகில் கண்ணிய தூரத்தில் அமர வைத்தவன்…
சிறு பிள்ளைக்கு விளக்குவது போல ….

“சிக்ஸ் பேக் லாம் சும்மா தேவி…நான் அதையும் தாண்டி போய்ட்டேன்….நான் ஒரு பாடி பில்டர்..அதுல பிரைஸ் கூட வாங்கியிருக்கேன்…சோ இருக்கு….”

“ஓ…பார்த்தா அப்டிலாம் தெரில……”வீம்பாய்..
“பார்த்தா தெரியாது…..”

ஒரு சாம்பிள் காட்டுறேன்…இரு”
அவன் எந்திரிக்க….

லைட் போடவா???…

“வேண்டாம் தேவி…” சொன்னவன்…

இவள் ஆவலாய் பார்க்கும்போதே…

வலது கைமணிக்கட்டை சுழற்றி…முழங்கைக்கு மேல் சதைக்கட்டை கொண்டு வந்தவன்..
இடது கையால் அவள் கையை கொண்டுவந்து அதில் வைத்தான்….
“இப்ப தொட்டு பாரு……”
“ஐ…. எலி தான்…வாவ்…” வியந்தவள்…
“இந்தக்கை…இந்தக்கை….” மழலையாய் மிழற்றினாள்……

அவளின் ஆர்வம் கண்டு நகைத்தவன்…

இடது கையிலேயும் கொண்டு வந்து..தொடு என்க….

அப்படியே செய்து….வாவ் …செம டாலண்ட்…பத்திரம் தந்தாள்…. 
“செமையா இருக்கு சிவா….ரியல்லி சூப்பர்..”மனதார பாராட்டினாள்….

“பரிசெல்லாம் வாங்கியிருக்கேன்னு சொல்றீங்க???…இப்ப போட்டிக்கு போறதில்லையா??”

“இல்ல …இப்ப ஒர்க் ஷாப் மாதிரி முழு நேரம் புது பாடி பில்டர்ஸ் உருவாக்கிறேன்….போட்டிக்கு நானே அனுப்புறேன்….லெவல் மாறிட்டதால….”

“ஓ…” கேட்டுக்கொண்டாள்….

“எப்படி சொல்லி தருவீங்க?”…….

அவனை எதோ கேட்டு விட்டு…

எத்தனை தடவதான் எழ…படுக்க….தரைக்கு போய் படுக்கணும்…ஆவ்வ்…
சோம்பேறி பட்டாள்…சொகுசாய் அலுங்காமல் வளர்ந்த உடம்பு….தூங்கி இருந்தால்….தெரியாது…இப்படி…தரையில்…..
இவளுக்கு உடம்பு வலிக்கும் உணர்வு….

கட்டிலில் மல்லாக்க படுத்து ரெஸ்ட் எடுக்க ஏக்கம் வர….

இவள் இந்த யோசனையில் ரெண்டும் கெட்டானாய் நிற்க…

“கண்ணை மூடேன் தேவி”
ஏன்?? கேள்வி முளைத்தாலும்….

‘இந்த இருட்டுல கண்ண மூடினா என்ன? தொறந்தா என்ன?’

“ஓகே… மூடிட்டேன் சிவா…..”

மங்கிய இருட்டு இருவருக்கும் நன்மையே செய்தது….

இவள் கண்களை அவன் பார்த்திருந்தால்….
கண்டு கொண்டிருப்பான்….அதில்
அவனை….

வெளிச்சம் இருந்திருந்தால் இவர்கள் பேசியே இருக்க மாட்டார்கள்….
ஒருவர் ஒருவரை பார்க்க வெட்கப்பட்டு…
வேறு பக்கம் படுத்து தூங்கியும் போயிருப்பார்கள்…
“இப்ப நான் என்ன செய்ய ??”

“உன் படுக்கை பக்கம் நகரு….”

“ம்ம்…சரியா???”

“இன்னும் கொஞ்சம்….பின்னாடி”

“பெர்பெக்ட்” போதும்…
சரியாய் அவளுக்கு நேர் நின்றவன்….டீ சர்ட் யை
கழற்றினான்…

“இப்ப கண்ண தொறக்கவா???”
இன்னும் அவன் நெருங்குவது புரிய….

“எதுக்கு இவ்ளோ கிட்டக்க ???”

“தேவி….”மிக அருகாமையில் அவன் விளிப்பு…..

“ம்ம்ம்…..” மொழி மறந்து….மயங்கி…

“இப்ப உனக்கு எதிரில் தான் இருக்கேன்….என் தோளை தொட முடியுதா பாரு……”
இவள் ஒன்றும் புரியாமல்….தயங்கி நிற்க…
“என் ஆறு வருஷ உழைப்பை உனக்கு காட்ட ஆசை தேவி…ப்ளீஸ்……”
மறுநொடி கைகளால் துழவ அவன் வெற்று மார்பு பட….
கூச்சத்தால்…கைகளை பின்னிழுத்தாள்…
அவன் ….அவளின் கை பிடித்து ..உள்ளங்கையோடு அழுத்தி தோளில் வைத்து….
“உன் கைகளில் மனதை கொண்டு வா..தேவி… ”

“ம்ம்….” என்னத்தை உணர்றது…பன்னி….பிசாசு…வைதாள்…

அவனுக்கு எப்படியோ??? இவள் சங்கடமாய் உணர்ந்தாள்….கட்டிக்கொள்ள போறவன் தான்…

ஆனால் இந்த தொடுகை….மூச்சடைக்க வைத்தது…பெண்ணாய்….

குனிந்து மூச்சை தம்பண்ணி அவளுக்கு வாகாய் நின்றான்…

குளிர்ந்த அவள் விரல்களும்…மென்மையான உள்ளங்கையின் பட்டும் படாத ஸ்பரிசமும்….
இவள் என்னவள்…இதமாய் இருக்க…
“ம்ம்ம்..தம் பிடிச்சிருக்கேன்….சீக்கிரம்…”அவன் மெதுகுரலில் ….

இப்பொழுது அவளின் மருத்துவ குணங்கள் வழி காட்ட… அவன் உடலின் சதை நார்க்கோளங்களின் வடிவை விரல்களால் காண ஆரம்பித்தாள்….நரம்புகள் வழி காட்ட…

கழுத்து,தோள் ,நெஞ்சு ,வயிறு,
இடுப்பு,தொடை,ஆடுசதை….
முழுமை வடிவங்கள்….வாவ்….

தேர்ந்த சிறபியின் சிலை அழகு…..

“பெண்டாஸ்டிக்….” முணுமுணுத்தாள்..

தொட்டு தடவி….அவனின் ஆணழகை உணர்ந்தவளுக்கு இப்பொழுது புது தலை வலி தோன்றியது….

நான் இவனுக்கு பொருத்தமானவளா????
சோ சேட் !!!!!
கவலை வந்தது….

அவனை அன்பு செய்வது எப்படி என்று வித விதமாய் யோசித்தவள்….
மன தாழ்வு தோன்ற ….சோர்ந்து போனாள்…

அழுதே பழகாதவள் அவள்…முதன் முறை கண்ணீர் வந்தது…

குழந்தைகளை கூட அழவிடாத குடும்ப அமைப்பை சேர்ந்தவள்….

மனம் இல்லையென்றாலும் தங்கை கேட்டதால் மட்டும்…..பிரிந்திருந்த நண்பனிடம் மணக்க கேட்ட அண்ணன்….

புலம்பினாலும் மகள் பிடித்தவனை மணக்கட்டும்….சம்மதித்த அன்னை….
கண்ணில் நின்றார்கள்….

அப்பா ….என்ற உறவையே தேடாமல் பார்த்துக்கொண்டவர்கள்….
தப்பு பண்ணிட்டேனோ???

“இவனுக்கு என்ன இல்லை??..நான் என்ன புதிதாய் குடுக்க போறேன்??…..”
கலங்கி நின்றாள்….

சட்டையை போட்டுக்கொண்டவன்….

இவளின்…!பேச்சற்ற நிலையை கண்டு….

“என்னாச்சு தேவி”

கண்களில் பொங்கி நின்ற கண்ணீரை மறைத்தவள்…

“படுக்கிறேன்….தொம் மென்று படுக்கையில் விழுந்தாள்….”

 பூச்செண்டு போல் உடல்கொண்டவள்…
முதன் முறையாய்….

மென்மையாய் …வெகு சொகுசாய் இருக்கும் இருக்கும் தன் உடலை வெறுத்தாள்…


‘இவனுக்கெல்லாம்…வெயிட்லிப்ட் தூக்குற பொண்ணு தான் சரியா இருப்பா???’

‘நீ பூனை குட்டி… ஒரு விரலில் தூக்கி சுற்றி விடுவான்…….’

‘அவனுக்கு நீ வாழ்கை குடுக்கிறியா???’


‘ஆள பாரு…ஒடுக்கி…’


ஒன்றைவிட்டு ஒன்றை தாவும் குரங்கு மனம் இதுதான் சாக்கு என்று…..விடாமல் இவளை டேமேஜ் பண்ணிக்கொண்டே இருக்க…….


சுணங்கிவிட்டாள்…..

” தேவி…என் உழைப்பு எப்படி இருக்கு ??”

ஒண்ணுமே சொல்லல…” சிவா ஆவலாய் கேட்க…

போடா…!!

“……………”

தூங்கிட்டியா???…


“இல்ல….” ஒற்றை வார்த்தை பதில்….

“இன்னும் சந்தேகம் எதாவது இருக்கா தேவி. ???” ….நெய் ஊற்ற

வாய் திறந்தாள்…..

“எனக்கு உங்களப்பத்தி ஒன்னும்
தெரிலேயே சிவா….”

குன்றிய குரலில்…

“அதனாலென்ன ….இனி நாம ரெண்டு பேர் ஒண்ணா தானே இருக்கப் போறோம்…….கொஞ்சம் கொஞ்சமாய் தெரிஞ்சிக்கலாம்…….

இன்னைக்கு நமக்கு ரொம்ப ஸ்பெஷல் நைட் இல்ல தேவி….

இலக்கணப்படி……”முதல் இரவு…..

முகம் சுகஉணர்வுகளில்…ஜொலிக்க…

நமக்கு பிள்ளைகள் பிறந்தாலும்…ஏஜ் ஆனாலும் மறக்க மாட்டோம் ல தேவி…”
மனம் நெகிழ்ந்து சொல்ல…


“ம்ம்ம்……..திரும்ப திரும்ப கேக்குறேன்ன்னு நினைக்காதீங்க….என்ன பிடிக்குமா??? “


சரியா சொல்லணும்….பொம்மை… ஓவியம்…உதாரணம் சொல்லக்கூடாது….”

“பிடிக்கும்…ரொம்ப பிடிக்கும்டா தேவி”
பாறையிடமிருந்து மெல்லிய குரல்….

“எங்க அண்ணன் மேல தான் கிரஷ் உங்களுக்கு…. ..இப்ப அவன் பழம் விட்டதும்….ரெண்டுபேரும் சேர்ந்துக்கிட்டீங்க போங்க…நீங்க யாரும் எனக்கு வேண்டாம்….” இத்து போன குற்ற பத்திரிக்கை வாசித்தவள்……


“எனக்கு இந்த கல்யாணமே வேணாம்….பிடிக்கல…”

அழுகை …அழுகை….ஒரே அழுகை….


தாழ்வு எண்ணம் …திரும்ப திரும்ப வந்து அலைகழிக்க…வெடித்து விட்டாள்….


நன்றாக பேசிக்கொண்டிருந்தவளின் அழுகை…


சிவாவுக்கு காரணம் புரியா விட்டாலும்….பாதித்தது…..!


எழுந்து அவள் அருகில் அமர்ந்து……

பிள்ளை போல் சுருண்டு அழுது கொண்டறிந்தவளை…பார்த்து….அகமும் முகமும் கலங்க…

“தேவிம்மா அழாதடா…” தவித்தான்…

“ஏண்டி பொண்டாட்டி ன்னு சொன்ன….இப்ப வேணாம் ணங்குற….இப்படி தான் மாரைஜ் ஆனதும் சொல்வியா????”

“ஏய் அழதடா….ப்ளீஸ்…வலிக்குதுடா….”

அவன் சமாதானம் இன்னும் அழுகையை உந்த…தேம்பி தேம்பி…அழ ஆரம்பித்தாள்…

மனதின் ஆசைகளை கண்ணீரில் கரைப்பவளை போல் அழ…அவளின் நிலை …அவனுக்கு தாங்க மாட்டாமல் இழுத்து தன் மடியில் போட……


உருண்டு விலகி பெட்ஷீட் யை விட்டு குளிர்ந்த தரைக்கு தாவி கவிழ்ந்து படுத்தாள்…

சும்மா …இருக்கும் போது தரையை பழித்தவள்….குளிர் தாங்க முடில…என்று அனத்தியவள்…
அதெல்லாம் ஒன்றுமே இல்லை….என்பது போல் கிடந்தாள்…

இந்நிலையை காணச்சகியாதவன்….

‘இவ அடங்க மாட்டா…. நாய்குட்டிக்கு பிடிவாதம்….’

‘செல்லக்குரங்கு’

அவளை தன் கைகளால் பூமாலையாய் அள்ளிஎடுக்க…

“விடுங்க …சிவா…நான் வேணாம்…உங்களுக்கு…போங்க நல்ல பொண்ணா பார்த்து கட்டிக்கோங்க” திமிறினாள்…

அதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லாமல்…தூக்கி வந்தவன் கட்டிலில் சுவற்றோரம்படுக்க வைத்தான்……இந்த பக்கம் படுத்து அவளை தப்பாத வண்ணம் சிறை பிடித்தான்….

இருவருக்கும்….தள்ளு முள்ளு….

“வேணாம் …விடுங்க போறேன்…” அழுத்தி பிடித்திருந்த கையை..விடுவிக்க
உதறிக்கொண்டிருந்தாள்…

சேட்டைக்காரி !!!! கொஞ்சினான்…

“எதுக்கு அழுகை சொல்லிட்டு போ” ஓட முயற்சித்தவளை மீண்டும்
தள்ளி…

தானும் அணைத்தார் போல் கை அணைவுக்குள் கொண்டு வந்தான்…
“ஐய… விடுங்க…இது பிடிக்கல விடுங்க….”கிடைத்த வாய்ப்பெல்லாம் வைத்து திமிறினாள்…


“காரணம் சொல்லிட்டு போடி…..”காது மடலில் மீசை உரசச்சொன்னான்….

அவனின் ….இந்த நெருக்கத்தில் கூசிச் சிலிர்த்தவள்….நெளிந்து…..

“விடுங்க….ப்ளீஸ்….” கண்ணீர் புதிதாய் துளிர்க்க…..


அவனுக்கு……இவளின் இந்த கிறுக்குதனமான செய்கைகள்….”லைக் ” ஐ கடந்து “லவ்” விடம்
கொண்டுவிட்டுருந்தததை …

அவனின் லூசு பொண்ணு அறியாள்…..

“போடி” எனும் வார்த்தை…உள்ளுக்குள் தூங்கி கொண்டிருந்த ஆதிவாசிப்பெண்ணை எழுப்ப…


அவ்ளோதான்….

நிமிஷத்தில் ….அழுகை விட்டு…..


“டி..ங்குறீங்க….தேவி ன்னு ஓல்ட் டா…கூப்பிடுறீங்க….பாகுபலில அனுஷ்கா க்கு படத்துல கால்ல குண்டு கட்டி விட்டமாதிரி …இத்தாம் பெரிய கொலுசு போடச்சொல்றீங்க…இதனாலேயே உங்கள பிடிக்கல….போங்க நீங்க எனக்கு வேணாம்….”

கண்ணியமாய்அணைத்தாற் லேசாய் கட்டி இருந்தவன்…

நிஜமாவே ஆசையாய் கட்டிக்கொண்டான்…..

அவள் முகத்தை உற்று பார்த்தவன்……மயக்கும் குரலில்…


விழியே !!!! கதை எழுது….


கண்ணீரில் எழுதாதே….

மஞ்சள் வானம் !!!!!

தென்றல்….சாட்சி !!!!

உனக்காகவே…நான் வாழ்கிறேன்…..

வீணா போன சண்டையை விட்டு இன்ப அதிர்ச்சியில்…..இவள் கெண்டை மீன் கண்கள் விரிய….

“பாடுறீங்க…” என்றாள் நம்பாமல்….

“ம்ம்…..எனக்கு துணை..அதுதான்….”
கண்ணைச்சிமிட்டியவன்….

யாருக்கும் தெரியாது….இன்று உனக்கு மட்டும் தான உனக்காகத் தான்……உன் அழுகை தாங்காமல்….உன் கண் படும் பாட்டை பார்த்து…இந்த பாட்டு வந்தது…..தேவிமா…”

“இதும் ஓல்ட் தான்….”வம்பு பண்ணினாள்….

ஹாஹா ….உல்லாசமாய் சிரித்தவன்……மனம் கனிந்து….

அவளை பிடித்து இன்னும் வாகாய் தன் மேல் சாய்த்தவன்……

எனக்கு பிடித்த பாடல் அதுஉனக்கும் பிடிக்குமே!!!

உன் மனதுபோகும் வழியை என் மனதும் அறியுமே !!!

என்னை பிடித்த நிலவு….அது உன்னை பிடிக்குமே….


உதிர்ந்தது பூக்களா ??


மனது எண்ணும் சோலையில் …

காதல் பூக்கள் உதிருமா???

தாடையால் அவள் தலையை முட்டி பாடினான்….

காதலன் தேர்வில்… …
உயர்தரப்புள்ளியில் வென்றதை அறியாமலே…!!!

ஹுக்கும்…இருக்குற தகுதிக்கே…மேட்ச் இல்லையாம்…இப்ப பாடி வேற கலக் குரானே!!!!

இதற்கும் நொடித்துக் கொண்டாள்…. அவனின் பேதை….


“காரணம் சொல்லு என் அழுத???”


சுவிட்ச் அணைத்தாற்போல்…..


பாட்டு பாடிய மயக்கம் தெளிந்து….


“நீங்க வேணாம்….எனக்கு….”

திரும்ப அதே பல்லவி….

“ஏன்??” அதட்டியவன்….அவள் முகம் நோக்கி குனிய….

முத்தமிட போறானோ????

அரண்டாள் …..அவனின் பூம்பாவை…… 
 
அவளின் முகம் நோக்கி நெருங்கி அவன் முகம் வர …
முத்தமிட போறானோ????!!! அரண்டாள்….

அவனின் பூம்பாவை…!!!

….படபட வென ஓர் உணர்வு…
உடலை மூச்சிழுத்து இறுக்கிக் கொண்டாள்….

ஏற்கனவே அவன் தொடுகையை…. அவன் அணைப்பைப் பிடிக்காதவள் போல் நடித்தாலும்…அது தரும் இதம்……அவளுக்கு வார்த்தைகள் தரமுடியாது…..

அவன் அகன்ற தோள் சிறகுகளுக்குள் பாதுகாப்பாய் இதமான சூட்டில் சொகுசாய் பதுங்கிகொண்டு ….

“நீ வேணாம்… நீ வேணாம்…”அவனைத் தவிர யாரையும் இனி மணமகனாக நினைக்கமுடியாது…..தெரிந்தே பைத்தியமாய் உளறினாள்….

அவனின் தேவி…

கண்மூடினால் தப்பித்து விடுபவள் போல கண்களை யும் உதட்டையும் இறுக்கி மூடி… வேறுபக்கம் முகத்தை திருப்பிக்கொண்டாள்………


அவனோ அவள் தலையை வருடி….கலைந்து சிலுப்பி அவள் முகத்தில் படர்ந்த முடிகளை அவள் காதுகள் பின் ஒதுக்கி குடுத்தான்…..

அவனின் சிறு செய்கை…..மௌனமாய் அன்பை உரைக்க….

மூடிய கண்களில் கண்ணீர் தானாய் வந்தது…..

என்ன உணர்விது!!!! சாகடிக்கிறடா!!!!

புரிப்படாமல்…

“ஏண்டி அழுகிற???” தவித்து… கண்ணீரோடு இருந்த ஈரக் கண்களை முத்தமிட்டான்….

கண்ணீர் அவன் உதடுகளில் படுமே….


ச்சீ..ச்சீ….அது அவளுக்கு பிடிக்காத உணர்வை கிளப்ப….


“ச்சூ…சிவா……திமிறி… விடுங்க…விடுங்க…ப்ளீஸ்…”தள்ளினாள்…


“நீ அழுகாத…..தாங்க முடிலடி… காரணம் சொல்லு….சரி பண்ணிக்கலாம்….”
கெஞ்சினான்…

விக்கி தக்கி….கரகர…குரலில்…

“உங்களுக்கு நான் மேட்சே இல்லை…நீங்க நல்லா இருக்கீங்க….”

“சப் “பென்று ஆனது அவனுக்கு…

‘அடி லூசு….’

நிம்மதியானன்…..


‘யப்பா..கொஞ்ச நேரத்துல கலக்கிட்டா..!!’“உனக்கென்ன??? சரியா தான் இருக்க….லூசு…”அவளிடம் பட்ட பாட்டில் வாய் மொழியாலே லூசு சொல்லிட்டான்….


“இல்ல நீங்க ஹெல்த்தியா இருக்கீங்க…நான் பாருங்க பூஞ்சையா. …இருக்கேன்….சத்தே இல்லை…நீங்க நல்ல பொண்ணா பார்த்து ….கட்…கோ…ங்க….”

பேச விடாமல்…அவள் மேல் கவிழ்ந்து உதட்டோடு உதடு சேர்ந்திருந்தான்….

அவள் நாசியில் ஆண் வாசம்……

அவன் மீது அவளின் பூ வாசம்…..


அணைதிருந்தவன்….. அவளின் மீது கவிழ்ந்திருந்தான்…… அவனின் பாதி பாரம்…இவள் மீதில்…அவளை அசைய விடாமல்முதன் முதல்……


அவ்வறை காற்றற்ற வெற்றிடமாய்….மாறியது போன்ற பிரமை…..
அவனின் தொடுகைக்கு குழைந்து உருகி வழிந்தது….அவள் தேகம்…..கண்டு கொண்டான் அவள் காதலன்…..அவனுக்கோ இம்முத்தம் அமிர்தம்……வெண்ணையின் மென்மையில்….நளினமான அவனுடைய உரிமைப் பெண்ணின் அவயங்கள்…. அவனுக்கு மேலும் மேலும் போதை ஊட்ட…..சூடான மூச்சிகள் எடுத்து…….கட்டுப்பாட்டை இழக்க….

அவள் கைகள் பிடிமானத்திக்கு அலைந்து…முதுகிலும்…பின்னங்கழுத்திலும் கோர்த்து பிடிக்க……..சுவை கண்டவன் விடவே இல்லை….அவளின் சிறு சிறு பலமில்லாத எதிர்ப்புகள் அவன் வேகத்தை கூட்டவே…….‘போடா…..எடுத்துக்க……உன்ந்து தானே….’

அவனிடமே ஒப்புவித்தாள்…

ஒரு கட்டத்தில் அவனின் வேகங்கள் இவளால் தாக்கு பிடிக்க முடியாமல்….. சுவாசிக்க முடியாமல் மூச்சு வாங்க…… அவனை நெட்டித்தள்ள….
அவளின் நிலை உணர்ந்தவன்….விலக்காமலே….

தன் மேல் போட்டுக்கொண்டான்…மிக வசதியாக….

இப்பொழுது ….


அவளின் இணக்கம் கூடுதல் தைரியம் தர….


…..கள்வனாய்… காதலனாய்…. மோகத்திலும் தாபத்திலும் அவன் கைகள் அவள் மேனியில் ஆசையுடன் அலைய…

அவனிடம் மண்டியிட்டு கிடக்கும் தன் உடலை எழுப்ப முடியாமல் …அதன் வழியே செல்லவும் முடியாமல்….

ஒன்றே ஒன்று மட்டும் அப்போதைக்கு தோன்றியது…..சிவா நல்லவன்…..எல்லை தாண்டமாட்டான்….


ஆனாலும் அவனின் தேடல்கள்???


‘நம்ப முடியாது ஸ்ரீ…..’


லேசாய் தடுத்தால்….. என்ன??


எதை தடுப்பது????


முத்தத்தையா???

எல்லை மீறும் கைகளையா???? ….

திணறித் தான் போனாள்…..

அவனின் தேடல்களின் வேகம் கண்டு…..

தன்னால் ராட்சசத்தனமாய் கற்பனை மட்டுமே …பண்ண முடியும்…போல….
ஐயோ…இவன் நிஜமாவே செய்றானே??…பதறினாள்…

அவன் முரட்டு இதழ்களுக்கு…..இவளின் பிஞ்சு உதடுகள் உணவாகி கொண்டிருந்தன….


‘ஏய் …எதாச்சும் பேச்சு குடுத்து அவனை கண்ட்ரோல் பண்ணு….டி…பக்கி…’

மூளை எச்சரிக்க…..


‘எங்க பேசவிடுறான்…’ மூஞ்சப்பாரு !!!


உனக்கும் ஆசை !!!!! _____மனம்

‘ஆமாம் போ….’

இன்னும் அவனை கிள்ளைபோல் தொத்தி கட்டிக்கொண்டாள்….

முழு சரணாகதி….

எடுத்துக்கோ….ஏதும் மிச்சம் எச்சமில்லாமல்….சுகமாய்….


கஞ்சனை போல் தேடியவனுக்கு பொக்கிஷத்தையே கொடுத்தாள்…..


இவளின் தளர்வு அவனுக்கு….புரிய….


அவனிடம் ….தெளிவு வந்தது……


உதட்டைவிட்டவன்……

“தேவிமா….”

அவ்ளோ ஒரு காதல் அக்குரலில்…..

“ம்ம்….”

அவன் தீண்டிய தீயின் வெப்பங்கள்…..தீராமல்….. முனங்கினாள்….


“தேங்க்ஸ் டி…..” காதில் முத்தமிட்டு கிசுகிசுத்தான்….


“முத முத்தம் டி…செம்மடி….”


அவளுக்கு அவனால் சிவக்க வைக்கப்பட்ட இதழில் புன்னகை வர….
பூ போல் விரிக்க….

தாகம் அடங்காதவனாய் திரும்ப சுவைக்க…


அவளின் மனது அவளிடம் இல்லை…..


அவன் வசம் முழுதாய் ….


அவன் கைகள் தொடும் இடங்கள் எல்லாம் பெண்மை மொட்டுக்கள்
பளீர் என கொத்து கொத்தாய் பூத்து பூக்காடாய் மாற….கிளர்ந்து கிறங்கி கிடந்தாள்..!!

அப்பூமகள் !!!!


அவள் நிலை அவளுக்கே புரிந்த பாடு இல்லை….


“அழகா இருகேடி….அம்மு”


“முடிலடி….என் கண்ட்ரோல் என் கிட்ட இல்லடி…மயக்குறடி….குறத்தி…..”கொஞ்சினான்…கலாப காதலனாய்….“வாடி …நம்ம வீட்டுக்கு போய்டலாம்????”


“ம்ம்ம்…”


“என்ன ம்ம்ம்”


அதற்கும்“ம்ம்…” முயங்கி…அவனுடன் பின்னி கிடந்தாள்…

ஒற்றைச்சொல் கவிதைக்காரி !!!!!

அது ஒரு தேவ கணம்….

சப்தமில்லா….பொன் கணம்…

இப்படியே கிடைக்க விரும்பும் கணம்….


“தேவிமா ….பேசுடி…ஏதாச்சும்….”

இப்படியும் அப்படியும் தலையை உருட்டி….முடியாது….செய்கை காட்டி….

நீ என்னை இன்னைக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுத்தியிருக்க தெரியுமா???


அவளின் இரு விழிகள் ஆர்வமாய் அண்ணார்ந்து பார்க்க….


குனிந்து கண்களில் முத்தமிட்டான்….


அவள் சண்டையிடும் போது சொன்ன காரணங்கள் …நியாபகம் வர….
ரசனையுடன்…குறும்பும் மின்ன….


“ஏண்டி ..கால்ல உனக்கு குண்டு கட்டி விட்டருக்கனா??…” வாய்விட்டு சிரித்தவன்….

ட்ராகுலா போல் ….பின்னங்கழுத்தில்….
பல் பதிய….!
“பொய்கடி” வைத்தான்..


“ச்சு…ப்ச்…வலிக்குது… விடுங்க சிவா … ..”அவளும் பொய்யாய் சொன்னாள்….


“இன்னும் அழுத்தி கடி ரத்தம் குடி….” மனம் நிஜமாவே அரற்ற….

“விடுங்க….” இந்த வார்த்தையை சொல்லும்போதெல்லாம் அவளை தனக்குள் இறுக்கினான்…


ஏண்டி சொல்ற….!!!! மனம்

உனக்கும் ஆசை……

‘ஆமாம்….போ…..’


“உன்ன தேவி ன்னு கூப்பிட கூடாதா????”

“ம்ம்ம்”


“போய்…..சாமி படம்லாம் பாரு….மனைவியை அப்படித்தான் கூப்பிடுவாங்க…லூசு…”

இப்பொழுது காது மடலை மென்று கடித்தான்….ரசனைக்காரன்……

கைகள்..அவளின் இடையின் வளைவுகளை அளந்து கொண்டிருக்க….

ஐய…..என்னை என்னை செய்வதாய் இவனுக்கு உத்தேசம்……!!!!


அவனிடம் விழுந்த மனதை….நிமிர்த்த முடியாமல் தவித்தாள்…


“நீயே பூமாதிரி இருக்க…உனக்கு பூ பேரழகுடி…”வாசம் பிடித்து….கொஞ்சினான்….


அவனின் எளிய வர்ணனை….இவளுக்கு ரொம்ம்ப பிடித்தது……முகம் கனிந்து…..

“நான் கருப்பு…குள்ளம்…. ஒல்லி….”
இதெல்லாம் சொல்லித்தான் அதிகமா வரதட்சணை நிறைய கேட்டாங்க….சிவா……..” பாவமாய் சொன்னாள்….


இன்னும் அவனோடு ஒண்டினாள்….அவனே சதமாய்….


“சாய்ந்துக்கொள்ள தோளிருந்தால்….சோகம் கூட சுகமே…..!!!! “

அவளின் துக்கம் உரைக்க….


அவளை பக்கத்தில் சரித்து நகர்த்தி விட்டு….கட்டிலின் தலைப்பகுதியில் வசதியாய் அமர்ந்து…அவளை தூக்கி
மடியில் அமர்த்தி நெஞ்சோடு சாய்த்து கொண்டான்….


“பட்டு….உன் கண்ணு அழகுக்கே கோடி ரூபா தரலாம்டா….அவங்க கெடக்குரங்க..விடுடா….”


கால்கள் மடக்கி போட்டு இவன் மடியில் அமர்ந்திருந்த..!!! அவளின் காலை தடவி….அவன் கைகள். …

“நீங்க லவ் கூட பண்ணல….போங்க…ஏன் ரவி …ஒதுக்கினப்ப..நீங்களும் சும்மா தானே இருந்தீங்க….”


திரும்ப ஒரு முழத்துக்கு முகத்தை நீட்டி அழ தொடங்க…..

அவளின் மலரினும் மெல்லிய உணர்வுகளின் காயங்களை இப்பொழுதுதான் வேர்வரை உணர்ந்தான்…

ஆம்…அவள் கேட்பதும்…சரிதான்…நண்பனுக்காக மணந்தால்…. இவள் மனம்????


“சாரி சாரி டா பட்டும்மா…என் குட்டிம்மா…அம்மு…என் ரோஜாப்பூவு……இப்ப லவ் பன்றேன்..ரொம்ப ….ரொம்ப லவ் பண்றேன்….சுத்தி முத்தி பார்த்துட்டு ….இந்த ஏ சி மெஷின் சாட்சி…உன் பொம்மைகள் …புத்தகங்கள்…பேன் கூட சாட்சி….எல்லாத்துக்கும் மேல இந்த இரவு ….தேவி என் மனைவி…..இந்த காம்பக்ட் சைஸ் தேவதையை எனக்கு ரொம்மம்மம்மம்மம்ப பிடிக்கும்…..


அவனின் சாட்சிகள்…இவளுக்கு சிரிப்பை மூட்ட…….


அழுகை முடிந்த சிரிப்பு……


“அப்ப இப்ப லவ் பண்ணுங்க….”

“ஆ….”


“இப்ப அத தான் பண்ணிட்டு இருக்கேனே???? ” அவன் திகைக்க….


“இதெல்லாம் செல்லாது…செல்லாது….” தீர்ப்பு சொன்னாள்…..


“இதோடா….பூனை குட்டியை புடிச்சு போட்டு எருமை கணக்கா மேல வுழுந்து முத்தம் குடுக்குறது…..கடிச்சி வைக்கிறது…..ஏமாந்தா அங்க

இங்க தொட்டு வைக்கிறது…. லவ்வா????போடா…போடா….சிவா சின்ன பொண்ண ஏமாத்துர” சிணுங்கினாள்….


காதல் மறந்து…ஊடல் மறந்து……அவனின் குறும்பு பிள்ளையாய்….

இவளைத் தவிர யார்
என்னை உயிர் வரை கவர முடியும்??


அவள் விளையாடுகிறாள்..தெரிந்தாலும்…


இவனும் இறங்கினான்…..


“அப்ப நீ நம்பல…. இது லவ் ன்னு…” விஷமமாய் வினவ

“யெஸ்…எஸ்…” திரும்ப நிரூபித்தாள் …சரியான வாத்து…..என்று


“”அப்ப வா சீக்கிரம்….முதலில் இருந்து பண்றேன்….நீ கரெக்ட் பண்ணு….”
உதட்டில் சிரிப்பு ஊற…வம்பிழுத்தான்….


“ஹாங்…இதோடா….இது போங்காட்டம்….”


குலுங்கி சிரித்தாள் ….அவனின் தேவதை பெண்…..  
“சரி அப்ப எப்படி லவ் பன்றது ன்னு சொல்லித்தாங்க டீச்சர்…….தட்சணை குடுத்து கத்துக்கிறேன்….” ரகசியமாய் கேட்டான்….“தினமும் போன் பண்ணனும்….”“ம்ம்ம”


“தினமும் நீ அழகு, உன் கண்ணு அழகு, உன் மூக்கு அழகு.பல்லு அழகுன்னு ஒரு கவிதை……காப்பியடிச்சியாவது எனக்கு மெசேஜ் பண்ணனும்….”“ம்ம்ம்…இன்னும் சொல்லுடி…நல்லாருக்கு….இதுவரை இல்ல….இனி உனக்காக தேடுறேன்…..”ரொம்ப ஆசையாக கேட்டுக்கொண்டுருந்தான்….


“தினமும் நைட் தூங்க போகும் போது பாட்டு பாடணும்…”


“இதெல்லாம் எப்ப தேவி ??? கல்யாணத்துக்கு அப்புறமா???”

சந்தேகம் வர….கேட்டான்….
“இப்ப….இன்னையிலிருந்து…அமுலுக்கு வருது ஹல்க்குகுட்டி….”


அவன் இரு கன்னங்களின் சதையையும் இரண்டு கைகளால் இழுத்து பிடித்து வலிக்க வைத்து கொஞ்சினாள்….அவன் லூசு….


அன்பு….அன்பு….அன்பு….


அவளுக்கும் அவனுக்குமான உரையாடல்களில் கிஞ்சித்தும் ஒரு போதும் யாருக்கு லாபம் என்ற எந்த சுய நலங்களோ….எதிர் காலத்தில் இப்படி ஆகணும்….அப்படி ஆகணும் என்ற கொட்டாவி விட வைக்கும் கற்பனைகளோ இல்லை….அவன் தேவை எதுவோ?….அன்பு…..


அதுமட்டும் அள்ளி அள்ளி தந்தாள்…


அன்புக்கு மட்டுமே இத்தனை வருடம் அவன் ஏங்கி கிடப்பது !!!!


அவனின் தொடுகைகளின் போது அவளின் நெகிழ்வு….

அவன் மீது அவள் கொண்ட அன்பை தான் சொன்னதே தவிர….


அரிய பொக்கிஷத்தை தருவதாக அலட்டாமல் பிகு செய்யாமல்….வெகு இயல்பாய் தந்தவளை…..கண்டு மேலும் காதல் கொண்டான்…


ஆசை என்றால் இந்த வச்சிகோ….விட்டு கொடுத்த பெண்மையை அவன் மதித்தான்…..


சிவா இத்தனை நேரம் நண்பர்களிடம் பேசிக் இருந்தால்….
“பொருளாதாரம் சரியில்லை….பண நடமாட்டம் இல்லை….ஞானமாய் பேசி விட்டு….கொஞ்சம் பணம் தேவ படுது மச்சி கிடைக்குமா? நாலு நாளில் தந்துடுறேன்…….என்பார்கள்…”


இன்றைக்கு இல்லாதவர்களுக்கு நாலு நாளில் எப்படி வரும் ???..
“இல்லை அந்த பொண்ணு மோசம் இந்த பொண்ணு மோசம்…இவன் அவளை லவ் பண்றான்… அவ நாலு பேரை அட் ய டைம் ல லவ் பண்றா….புறணி நடக்கும்….”


இன்னொருத்தன் ….வா மச்சி பார் க்கு போலாம் சும்மா ஒரு ரவுண்டு மட்டும்…..என்பான்……யாரும் உதாரணத்துக்கு வேண்டாம்…
ரவியிடம் ரெண்டு மணிநேரம் கூட இருந்தால்…..பணத்தை பெருக்குவது எப்படி ன்னு சொல்லி குடுத்துருப்பான்…
ஆனால் அவனின் கன்னிப்பாவையோ….


எதையும் விசாரிக்கவில்லை…தோண்டி துருவி இவன் பொருளாதாரத்தை ஆராயவில்லை…எங்க இருக்க ??? சொந்த வீடா?? வாடகை வீடா?? ஏதும் கேட்கலை….


அவள் படிப்பை ஒரு போதும் தன் தகுதியாக முன் நிறுத்தாத அவளின் ஒரு குணம் போதும்….


ஆயுளுக்கும் அவளை தன் தோள் கிள்ளையாக சுமக்க…அவனுக்கு சம்மதம்….

“கல்யாணத்துக்கு பின்னாடி தேவிமா …செஞ்சுக்கலாம்….ரவி…எதாவது சொல்லுவான்…..சரியா???”

“ம்ம் …”விட்டு விட்டாள்…

இப்பொழுது அவள் கவனம்….அவனிடம்….


அவன் முடி கோதி….

“உங்க காது… ரப்பர் மாதிரி சாப்ட் ஆஹ் இருக்கு சிவா…….”
சொல்லி….
வெற்றிலை போல குவித்து மடிச்சு…சுருட்டி பட்டென்று விட….அது பழய ஷேப் வர….


ஹாஹா….. ரசித்து சிரித்தாள்.


அவள் மடியில் அவன் படுத்திருந்தான்….


அவனின் காதல் செயல்களை கொஞ்சம் நிறுத்தி வைத்திருந்தான்….


“இப்ப அவ டர்ன்…சொல்லிவிட்டான்….

“லவ் பண்ணுடி என் பட்டு குட்டி கத்துகிறேன்….” கொஞ்சி….

அந்த இடைவெளி அவனுக்கு வேண்டும்…


அவளின் அருகாமை இவனை கிறு கிறுக்க ….வைக்க….


முழுசா….இப்பவே வேணும்…..ஒரே ஒரு வாட்டி மட்டும்….ப்ளீஸ்….ஆசை ….துடிக்க….அவளே சம்மதம் எங்குற மாதிரி உன்கைல துவண்டு கிடைக்கா….நீ தான்….ரொம்ப பண்ற…..தீவிரமாய் கேட்கும் இளமையை என் செய்வான்…..


காதுக்கு ஒரு நறுக் க்குன்னு ஒரு கடி……அவள் தான்….


அவனுக்கு ஊசி குத்தின வலி போல் சுறுக்….


ஸ்ஸ்ஸ்…காதை நீவி விட்டு..

“வலிக்குதுடி….
ஏண்டி இது லவ் ஆஹ்??? “டவுட் கேட்டான்….


“ஆமாம் …ஆமாம்….”என்றாள்கண்கள் ஒளிர..


கொஞ்சம் அவனை தள்ளி படுக்க சொல்லி….

“கண்ணை மூடுங்க….”சிவா….


அவன் இருக்கும் அபாய மூடில்….

‘இவள் என்ன பண்ணி வைக்க போறாளோ???’
பயந்தான்….“சொல்லு…என்ன செய்யப்போற??? “………திகிலுடன்….

“சஸ்பென்ஸ் பல்க்கு குட்டி….”


கையில் ஒரு கிள்ளு…

அவள் கிள்ளி கிள்ளி….


அங்கங்கு காதல் முத்திரைகள் ……அவன் உடம்பில்….


“சரி மூடிட்டேன்….”“இப்ப தியானம் மாதிரி ஒன்னு செய்ய போறேன்….அமைதியா இருக்கணும்…..”


“நான் சொல்றத அப்டியே செய்யணும்….” சீரியஸ் குரலில்…..


“ம்ம்ம்”கை கால்லாம் ரிலாக்ஸ் ஆ வைங்க…

வாய் கொள்ளாத சிரிப்பு அவளுக்கு…..“இப்ப நான் உங்களுக்கு ட்ரீட்மென்ட பண்றேன்….”

“மூச்சை நல்லா இழுத்து விடுங்க…..”அடி போடி…என்னை சோதிக்காதே..!!!!!


காதல் ராட்சஷி !!!!


கடலும் வானும்
சத்தியத்துக்கு
கட்டுப்பட்டு இருக்காம்…..
இப்ப நானும்…டி…..
அந்த கானாவானா கூட…..!!!!கடுப்பில் கவிதை வந்தது அவனுக்கு…..


அவன் டீ ஷர்ட்யை வயிற்றில் இருந்து சுருட்டி மார்புக்கு தள்ளினாள்….
ஐயோ!!!!! மெயின் பாக்ஸ்ல கை வைக்குறா????என்னடி …..பண்ண போற?? …..அலறினான்…

அவன் அடி வயிற்று நரம்புகள் தாளம் தப்பி குய்யோ…முய்யோ…. ன்னு குதிக்க“ஷ்….தியானம்….நோ வாய்ஸ்….”

சப்தமில்லாமல் சிரித்து…அவள் பூனை போன்ற விரல் நகத்தின் பாய்ச்சல்கள் அவனை என்னென்னவோ செய்தது….சிறிது நேரம் ஒரு அசைவும் இல்லை….


அவன் ரிலாக்ஸ் ஆகி ….பெருமூச்சு விடும் போது….


தொப்புளில் வாய் குவித்து காற்றை சத்தமிட்டு அனுப்பி கிச்சு கிச்சு மூட்ட….
“ஹுகு ஹுகு….ஹாஹா…”குழந்தை போல வினோதமாய் குலுங்கிச்சிரித்தான்…கூச்சத்தில் அவன் நகர…


“நோ…”


“சிரிக்கக் கூடாது…நகரக்கூடாது…..அவுட் அவுட்…”என்றாள்….


திரும்ப அப்படி செய்ய…அவனால் கூச்சத்தையும் சிரிப்பையும் அடக்க முடியாமல் எந்திரித்து ஓட…


அவள் துரத்த…..அவன் அந்த சின்ன அறையில்…..இருந்த கொஞ்ச இடத்தில கபடி விளையாட்டு போல் அவளை ஏமாற்றி கையில் சிக்காமல் குனிந்து நெளிந்து தப்ப முயற்சிக்க…


அவளோ…அடவடியாய் மேல் விழுந்து பிடித்தாள்….


தரையில் உருண்டார்கள்…


ஒருவர் மேல் ஒருவர்…..விரும்பியே ….


இருவருக்கும் அடுத்த கட்டம் போகும் உந்துதல்….அந்நேரம்….படுக்கையில் கிடந்த அவளின் செல் அலாரம் அடித்து மணி 3.45 am என்றது….“கிளம்புறேன் தேவி….இப்போ போனா யார் கண்ணிலேயும் படாம போயிரலாம்….”
அவனுக்குத்தான் ……


இருவருக்கும் மனமே இல்லை….அவள் அப்படியே நிற்க…….

அவன். “பிரெஷ் பண்ணிட்டு வரேன்…”ரெஸ்ட் ரூம் செல்ல….


இவள் …அந்த அறையை …விட்டு வெளி வந்து…..அவனுக்கு கொடுக்க பால் எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் சிம்மில் வைத்து விட்டு……
தன் அம்மாவின் அறைக்கு சென்று சின்ன லைட் போட்டு முகம் கழுவி…. டூத் பிரஷ் எடுக்க…


வெட்கம் வந்தது….


பல் விளக்க விரும்ப வில்லை…


வாய் அவனின் முத்தங்களால் இனித்து கிடந்தது….


நாராய் தொங்கிய பூவை தூக்கி எரியாமல் பத்திர படுத்தினாள்….
அவன் ரசித்தது…..எனக்கு பொக்கிஷம்….


எங்கும் அவன்….எதிலும் அவன்…..

தலை வாரும்போது அவள் முகம் அவளுக்கே அந்நியமாய்….


உதடு சிவந்துபருத்து தெரிந்தது….காரணம் அவன்……

கண் மூடி மயங்கி நின்றாள்….

புதுப்பெண்ணின் பொழிவு….
அவளுடம்பில்…..
பள பள வென்று தோல் மின்னியது….


பால்… நினைவுக்கு வர…


அம்மாவின் பெரிய சைஸ் பொட்டை ஒட்டி….

“நல்லார்க்கதேவி”….புன்னகைத்து….சமயலறைக்கு ஓட….


பால் தயாராக இருக்க….நேற்று மாதிரி ஹார்லிக்ஸ் போட்டு ஆற்ற ஆரம்பிக்க…. அவன் வெளிலேயே வந்துவிட்டான்….


திருத்திய அவள் உருவத்தை…. இப்பொழுது தான் பார்ப்பது போல் பார்த்து வைக்க…இவளுக்கு கை நடுங்கி பால் சிந்தியது….அவள் பின்னொடு ஒட்டியவன்…

தானும் பாத்திரத்தை பிடித்தது உதவ….


விளங்கிரும் டி !!!!! நொடித்தது மனம்…..இன்னும் உங்க ரொமான்ஸ் தீரலையா???!!!நான் கண்டம் விட்டு கண்டம் தாவ போறேன்….!!!! முடில !!


போ …போ…ஓடிரு….


சிவனின் தேவி……… 
அவன் பின்னொடு நின்று
அணைத்திருந்தது அத்தனை பாந்தமாய்,

எத்தனை வார்த்தைகளும் சொல்ல முடியாத உணர்வு….
காதலாய்…. உரிமையாய் இருந்தது அவன் செயல்…
“இந்தாங்க ….ஆறிடுச்சு…எடுத்துக்கங்க….” சுகமாய் கண்ட விடிகாலை கனவு கலைவது போல் இருந்தாலும் ….
போகணுமே…..!!!
“ம்ம்….”
ஆனால் அவன் அவளைக் விட்டுநகரவில்லை…..

என்ன செய்றான்….என்பது போல் அவனை அண்ணார்ந்து பார்க்க…

“செமையா இருகேடி….. கொல்லுற…..” கிசுகிசுத்த unான்…

இதழில் இதயம் மலர…..அவன் புகழ்ச்சியால் முகம் விகசிக்க….

“இந்த மங்கிய வெளிச்சம் உன்ன எப்படி காட்டுது தெரியுமா???”

“தேவதையா ஜொல்லிக்குற டி…..”

“தேவிமா உன்ன விட்டுட்டு போவ மனசே இல்லடி….”
அவன் நெஞ்சினில் பின்னந்தலையை அழுத்தியவள்….
“என்ன “டி ” தூள் பறக்குது…ஹாங்…கொன்றுவேன்….”
செல்லமாய் மிரட்டினாள்…..


அவன் உண்மையை சொல்றானோ இல்ல உளருகிறானோ ..காதில் தேனை வார்த்தது வார்த்தைகள்….


அவன் எங்கே இவள் சொன்னதை
கவனித்தான்…

வயிற்றோடு கட்டி இருந்த கையை எடுத்து…அவள் பின்னலை ஒரு பக்கம் ஓரம் கட்டி…..தலையை முன்பக்கமாய்
குனிந்து…..மெல்லிய தங்க சங்கிலி மின்னிய முன்னங்கழுத்தில் முத்தமிட்டான்….

ஒரே நாளில் பெண்ணை வசியம் செய்யும் வகையை பாடம் ஏதும் படிக்காமலே கற்றறிந்தான் அக்கள்வன்…..

டேய்…என்னடா பண்ற…!!!

உடலெங்கும் அவன் தொடுகை மின்சாரம் உற்பத்தி செய்ய….
அவனிடமிருந்து வலுவிலேயே விலகி…!


“ஹார்லிக்ஸ் ஆறிடும்…. எடுத்துக்கோங்க… சிவா….”

கர கர குரலில் சொன்னாள்….முழுக்க முழுக்க உணர்ச்சிகளின் பிடியில்அவள்….


அவன் கையில் அந்த கோப்பையை குடுக்க….

“நீ முதலில் குடி….”


“வேணாம்…நீங்க குடிச்சிட்டு தாங்க….”


“ம்ஹும் …..நீ முதல்ல…”


மனம் நிறைந்த போனது தேவி க்கு….

“வேறென்ன வேண்டும் உலகத்திலே….
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்….”

இவளை கண்ணால் பருகியபடியே….குடித்து முடித்தவன்….

அவளிடம் சாவி கேட்டு வாங்கி….
சத்தமில்லாமல் கதவை திறக்க….


இவளுக்கு தான் பிரிவு தாங்காமல் ….

கண்ணீர் கொட்டியது….

மூடிய கதவை விரிய திறக்கும் முன் இவளை பார்த்தவனுக்கும்….


வலியே….!!!


அவள் அழுதாலே அவ்வுணர்ச்சி தன்னை வேர் வரை பாதிப்பதை கண்டு….செயலற்ற நிலை கொண்டான்…..


“பட்டு….இன்னும் 10 நாள் தாண்டா…. “அவள் விரல்களை தன் விரல்களோடு கோர்த்து அழுத்தி பிடித்து தேற்றினான்…


“இதோடா…இன்னும் 9 நாள் தான்…”தேம்பிய படியே திருத்தினாள்…


அவளின் இந்த செய்கை அவனுள் குறும்பை விதைக்க…

நான் இந்த வீட்டு படிய மிதிக்கும் பொது…ஆனான பட்ட ரவியையே கேள்வி கேட்டு கலங்கடிக்கும் ஒரு தைரியமான……வீரமான….
டாக்டர் பொண்ணு…பதவிசா இருக்கும்…பேச காசு கேட்கும்…..
நான் பொய் சொல்லி வீட்டுக்கு வந்ததற்கு….ஏன்டா வீட்டுக்கு வந்த வெளிய போ….இரு ரவி கிட்ட சொல்லி உன்ன என்ன பண்றேன் …பாரு…ன்னு சொல்லுவன்னெல்லாம் பயந்துட்டு வந்தேன்….


ஆனா நீ….என்னடி இப்படி பச்சை புள்ளையா இருக்க ???


அவளை இழுத்து காதல் பொங்க ..அணைத்தான்….

பேச்சின்றி அவனின் வலிய மார்பில் ஒண்டியவள்…..


கண்ணீர் மிக….அவன் டீ சர்டில் நனைக்க….

“நானும் நானா தான் இருத்தேன்….உங்களை பார்த்த பத்து நிமிஷம் வரை….
உங்களை அகம் கொண்ட பின் என் சுயம் …என்கிட்ட இல்லை சிவா….
நான் யாருன்னு தெரில…..நீங்க நீங்க …மட்டும் தான் தெரியிரீங்க….
உங்களுக்கு கிடைக்காததெல்லாம் நான் கொடுக்கணும்….பேராசை வருது..
பைத்தியமா போய்ட்டேன்….அழுகை அழுகையா வருது…. அது இத்தனை நாள் உங்களை தனியா விட்டு இருந்திருக்கிறேன்….உங்கள லவ் பண்ணாம….எனக்கு எல்லாம் கடவுள் குடுத்துருக்கார்….ஆனா உங்களுக்கு….மூணு வயசில் யாரும் இல்லாத என் சிவா வை….நான் எப்படி விட்டேன்…..எனக்கு தெரில சிவா….ஸாரி சிவா இத்தனை நாள் உங்களை நான் நேசிக்காமல் இருந்ததுக்கு…..ப்ளீஸ்….”


அரற்றினாள்….அவன் பேதை….
யார் சொன்னது……உடலின் சங்கமம் காதலின் உச்சம் என்று….


இதோ இந்த காதல் பெண்ணின் அன்பும் கண்ணீரும் அவனுக்கு…ஓராயிரம் உச்சங்களை உணர்வுக்குள் கொண்டு வர…..


தொண்டை அடைக்க ….


சொல் ….

இக்கணத்தை அசிங்க படுத்திவிடும்…..

அடுத்த நொடி தேவி….

அவனின் ஆவேச முத்தங்களால் அர்ச்சிக்கப்பட்டாள்…..
எலும்புகள் தாண்டி அவளுள் புதைய விரும்புபவன் போல…

அவளை மலை பாம்பு போல் நொறுக்கினான்….

இருவருக்கும் உயிராய் ஒன்றிய நிலை…..

அவன் கண்களிலும் கண்ணீர்…..


தேவிமா…என் பட்டு குட்டி…இனி காலம் முழுக்க கூட இருப்பேன் என்னை உன் கண்ணிலே வச்சிக்கடா….பட்டு….!
ஐ லவ் யூ டா…..அம்மு…..

பிதற்றினான் ….தேவி பித்து பிடித்து….  
முதலில் தெளிந்தவன்… சிவா ..தான்….

கொடியென தன் கைகளில் துவண்டு கிடைந்தவளை….ஆதூரமாய் தடவிக்கொடுத்து…

“அம்மு…நான் சொல்றத கேட்பியா??”

தலையை ஆட்ட….

அவளின் குனிந்த தலையை பார்க்க பிடிக்காமல்….

கைப்பாவையாய் தூக்கி , அவளை சமையலறை மேடையில் தூக்கி அமர்த்தினான்…


நேருக்கு நேர் பார்க்க வசதியாய்….


அவள் கால்களின் இடையில் தன்னை நிறுத்தி…அவளை நெருங்கி….இடது கை இடையை வளைத்திருக்க மறு
கை நான்கு விரல்கள் கன்னத்தில் இருக்க பெருவிரல் அவள் நாடியை தடவிக்கொடுக்க….

“நேத்து நைட் ரவி என் தங்கச்சியை பார்க்கக்கூடாது பேச ட்ரை பண்ண கூடாது ன்னு நேத்து வார்ன் பண்ணதால தான்….”
வீம்புக்கு வந்தேன்…அம்மு….”

அசட்டையாக கேட்க அரம்பித்தவள்….இப்பொழுது அவனின் சீரியஸ் பேச்சை கவனிக்க ஆரம்பித்தாள்…

“சோ அம்மு …இந்த 9டேஸ் ….முன்னாடி எப்படி இருந்தோமோ அப்படியே இருப்போம்…எந்த சலசலப்பும் வேணாம்டா….”

அவள் வாய் திறக்க …

“நோ….ஏதும் சொல்லக்கூடாது….ஒன்லி சே ….ssss…”

வாயோடு வாய் வைத்தான்….

இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பேசுகிறேன் ….

சொல்ல விடுறானா பாரு….பக்கி…!!!

உதட்டிலிருந்து அவன் இதழ்கள் கழுத்துக்கு இறங்க….

இறங்கி…..!!!! மூச்சு வாங்கினாள்…..

சல்வாரின் யூ நெக் க்கு வந்தவன் ….கீழே போக வழி இல்லாமல்….
தடுமாறி…..

தடுமாறிய இடத்தில் முத்தமிட்டு ….நிறுத்தி.

அவளை இறக்கி விட முயல….


“ஒரே ஒரு செல்ஃபி…”ஆசையாய் கேட்க….


அவன் செல்லை குடுத்து …

“உன் வசதிக்கு எடுத்துக்கோ….இதை பத்தி எனக்கு அவ்ளோவா தெரியாது….” ஒத்துக் கொண்டான்..

இப்படியும் எளிய ஆண் இருப்பானா??? விந்தையாய்…

ஒற்றை பார்வை பார்த்து அவன் உயிரைக் கொண்டாள்….அவன் சகி…

அவனை முன் விட்டு அவனை தோளை தொற்றி அதே போஸ் இல் எத்தனை முறை அமுக்க முடியுமோ பொத்தானை அமுக்கி எடுத்து தள்ளினாள்….

“எனக்கு இதுல நல்லதா அனுப்பிருங்க…” வேண்டுதலாய்…

“போட்டோ பத்திரம் …யாருக்கும் காட்டிராத….” எச்சரித்து…

வரேன்…தேவி…”

“லைட் ஆப் பண்ணு…. கதவை பூட்டிக்கோ….வா…” என்க..

அவள் வாய் திறக்க…

“நோ ..ஏதும் பேசாத….டைம் ஆகுது….ப்ளீஸ் டா” கெஞ்சவே ஆரம்பித்து விட்டான்….

“ம்ம்ம். 9 நாளில் குண்டாவது எப்படி மாஸ்டர்???” கேலியாக

பளிச் சென்று சிரித்தவன்….

“நல்லா சாப்பிட்டுட்டு தூங்கு…தூங்கு…தூங்கு….” அவ்ளோ தான்…..

விடி விளக்கையும் அணைத்து ….கதவைத் திறந்து, கிரில் கதவையும் சப்தமில்லாமல் மெதுவாய் திறந்து….அவன் …கழட்டி விட்டிருந்த ஷு வை போட்டு கொண்டே…

பூட்டிக்கோ…சைகை செய்தான்……

இவள் வா …சைகை செய்ய…
புருவம் தூக்கி என்ன என்பது போல் கேட்க….கீழ் வந்தவள்…
கன்னம் கடித்து எச்சி வச்சி முத்தம் கொடுத்தாள்…
இவளாய் வலிந்து தந்தது….
அவன் கன்னத்து எச்சியை உள்ளங்கை கொண்டு …..துடைத்து விட்டு …பை…என்க…

இவள் போனவுடன் போன் பண்ண சொல்லி சைகை காட்ட..

அவள் துடைத்த உள்ளங்கையை அவன் முத்தமிட்டு….தலை ஆட்டியவன்….
காதருகில் வந்து….

“தேவிமா நீ போட்ருக்க சட்டையில் முன்னும் பின்னும் எந்த ஓபன் உம் இல்லை டி.. என்ன ரொம்ப சோதிச்சுருச்சு…இனி இப்டி போடாத….”

“பை டா.. பத்திரம்….”

அவள் இரண்டு கதவையும் பூட்டி கொள்வதை …பார்த்த பிறகே ….சென்றான்…


இப்ப என்ன சொன்னான்??…புரில….என்ன சம்பந்தமில்லாமல்…

கிசுகிசுப்பாய் அந்தரங்கமாய் சொன்ன குற்றசாட்டினை… …இவள் புரிந்த போது….

நாணம் வந்து தானாய் வெட்கத்தில் தலை குனிந்தாள் ….கள்ளன்….


சீப் போ…பிராடு….கொஞ்சினாள்…ஆசையப்பாரு…!

இதுல கம்பளைன்ட் வேற ஓபன் இல்லன்னு….

போடா…போடா….என் யான குட்டி…!
 
“கால் திஸ் நம்பர்…” மெசேஜ் அவனுக்கு தட்டிவிட்டு…
அவள் எண்ணில் ரவி எப்போதும் கூப்பிடும் வாய்ப்பு இருந்தது….

அதனால்…

இது அவளின் மாஜி நம்பர்….சிவாவுக்கு மட்டும்….சும்மா கிடந்த பேசிக் மாடல் போனில் போட்டு வைத்தாள்….அவனிடம் பேசுவதற்கு…!!

மனம் பூரா இனித்துக் கிடந்தது….கால் கொலுசை போல் மனம் முழுக்க கனமாய் அவன் நினைவுகள்……

அவன் படுத்திருந்த தலையணையில்…அவன் வாசம் பிடித்தாள்…..


அவன் கூட இருந்த நேரங்களில் அவர்கள் செய்த லீலைகள்…புது வெட்கம் வந்தது….சுகம்….சுகம்…

இன்ப குறுகுறுப்பு….அடங்கவே இல்லை…

மறக்கமுடியாத இரவு….

இன்னும் நிறைய பேசி அன்பை வெளி
படுத்தியிருக்கலாம்…என்ன சாப்பிடுவான்?..என்ன பிடிக்கும்…பிடிக்காது…எல்லாம் கேட்டிருக்கணும்…..

தான் அழுது அவனை வாட்டி….. படாத பாடு பட்ட சிவா வின் மீது….காதல் இன்னும் இன்னும்கூடியது….

ரவியின் முசுட்டு குணம் இவளும் அறிந்ததே…

சரி ….ஒருவாரம் ரெண்டு நாள்….சிவா சொன்ன மாதிரி சைலன்ட்டா இருந்துபோம்….

கஷ்டம் தான்….ஆனால் நமக்காய் பொறுப்போடு எடுத்து செய்யும்….
அண்ணனின்அன்புக்கு மரியாதை குடுத்தே ஆகணும்….
இன்னொன்னு அம்மாவிடம் தப்பிக்கவே முடியாது…சி ஐ டி…
மாட்டிப்போம்..!!! சோ….இன்றோடு பேசுவதையெல்லாம் பேசிட்டு….
சிவா வீட்டுக்கு போன பின் ….எல்லாத்துக்கும் சேர்த்து….செஞ்சிக்கலாம்….முகம் தெளிவாக….

டன்…முடிவெடுத்தாள்……

அப்படி சாத்தியமா??? டவுட் வந்தது…..

மனம் முழுக்க சிவா…சிவா…சிவா மட்டுமே….


அந்த பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி கடவுளுக்கு நன்றி சொல்ல தோணியது….


ஹீட்டர் போட்டவள்… தனக்கு உடையை தேட..

கையில் கிடைத்த சுடிதார் ஐ ….
இனி என் செல்லம் நீ கிடையாதுடி….என்று தள்ளி….
நைட்டியை எடுத்துக்கொண்டாள்….. சிவா போன் பண்ணி தேடுவான் என்று சட்டென்று குளித்தவள்….

மார்பில் பாவாடை கட்டி வெளியே ஓடி வர….
அவன் போன் வர…சரியாய் இருந்தது….

“வீட்டுக்கு வந்துட்டேன்..தேவிமா…”

“ம்ம்ம்..”

“என்னடி…ம்ம்ம்” காதலாய்…

“யப்பா என்னா வார்த்தை….”சொக்கிப்போனாள்… அவனின் சொக்காயீ….

“என்ன என்னாடி ????…” ராகமாய் இழுத்து கேட்டு வம்பிழுத்தாள்….


“முடிலடி”


“ஹாஹா….அச்சோ…அப்படியா???….இங்கேர்ந்து போவும் பொது சொலிருந்தீங்கன்னா….ரெண்டு ஊசி ஸ்ட்ராங்கா போட்டருபேன்ல….உங்களுக்கு பிரீ தான் சிவா….” கேலியாய்…


மறுபக்கம் வாய்விட்டு சிரித்தவன்…..


“ஏண்டி புரிலையா????”ரகசிய குரலில்….

“இல்லையே….என்ன சொல்றீங்க…”இவளும் அவன் போலவே ஹஸ்கி குரலில் பேச….

கிறங்கித்தான் போனான் அவள் காதலன்…

“உன் குரல் செம்மடி….”பாராட்டாய்….

துவட்டாத தலையின் ஈரம்….இவள் மார்பில் சொட்டி ஓட

காதில் செல்லை வைத்துக்கொண்டே. …துவட்ட ஆரம்பிக்க…

“ம்ம்ம்….”

அவனுக்கு அவளிடம் பேசிக்கொண்டே இருக்கணும் ஆவல் உந்த…..

ஏதோ கேட்கணும் என்று….

“நான் படுத்துருக்கேன்…..நீ என்ன பண்ற…”

“நான் குளிச்சுட்டு தலை துவட்டிட்டு இருக்கேன்….”

ஹா…

சட்டென்று …அவன் கற்பனைகள் எங்கெங்கோ ஓட….

” வாவ்….என்ன டிரஸ் போட்ருக்க ?”

“இன்ஸ்கர்ட் கட்டி……..”சொல்லிட்டு நாக்கை கடித்தாள்….

கிறுக்கி…கிறுக்கி….திரும்ப வரபோறான் பாரு….

அடங்க மாட்ட….

அம்மாவும் அண்ணனும் வரதுக்குள்ளே….நாலு குட்டி போட்ருவ போல…கே டி கேர்ள்…..
ஒரே நாளே….யா???..போ போ….இது ஓவர்….
Eeee…

“இஇல்ல இல்ல….நைட்டி….” உளறினாள்….

“போட்டோ காட்டு நம்புறேன்” விடாமல்….அவன்

“நம்ம போட்டோ? ” இவள் கேட்க…

“அது அனுப்புறேன்….ஜஸ்ட் பைவ் செகண்ட் உன் போட்டோ வரணும் ”
செல்லமாய் மிரட்டினான்….

போன் கட் பண்ணினான்…!

தலை வழியே நைட்டி போட்டவள் …கூந்தல் விரி கோலமாய்அப்டியே பேய் மாறியே போட்டோ எடுத்து வாட்சப்பில் அனுப்பிவிட்டாள்…

வா …வா… என்கிட்டேயே …வா…???

இந்த போட்டோ பார்த்துட்டு …..இனி போட்டோ கேப்ப???? ஹல்க்கி !! பல்க்கி!!

அவனும் அனுப்பி இருந்தான்….செல்பியை….

காட்சி கவிதையாய்!!!!

ஒரு மங்கிய எபக்ட்டில்…..சோகமாய் முகம் இருக்க……இவள் கண்கள் மட்டும் கருந்திராட்சையாய் மின்ன….சாய்தாற்போல் அவன் தோள்களில் இவள் இடது கை விரல்கள் தோரணமாய்….இவளுக்கு முன் மந்தகாச சிரிப்போடு அவன்….வாவ்…

காதல் பார்வையினால் இது ஓவியமாக தெரியுதா???

அந்த செல்பியைபார்த்த படியே நின்றாள்….

சிவா அழைக்க.

“சிவா …நல்லா வந்திருக்குல….” ஆசையாய் பேச தொடங்க….

“இச்சு இச்சு இச்சு… …..००००००”

முத்தம்….இவள் செவிகளில்.ஒலிக்க….

அயர்ந்து நின்றாள்….உச்சி முதல் உள்ளங்கால் வரை…அதிர்வு….

“செமையா இருகேடி….பிரஷ்ஷா…வாசமா….முடிலடி….” அவள் போட்டோ எபக்ட்….

முடில முடிக்கும் போது இவளுக்கு மயக்கம் தெரிந்திருந்தது…

“அதெப்படி வாசம் தெரிது… பொய்…”கொஞ்சினாள்…

“உன் வாசம் ..என் மேல இன்னும் இருக்குடி….பட்டு….”தாபமாய் சொன்னான்…
அடுத்து இன்னொரு முடில வருவதற்கு முன்….

நம்ம செல்பி பார்தீங்களா? சூப்பரா இருக்குல???….

“ம்ம்ம்….நானும் பார்த்திட்டே இருந்தேன் தேவி……..நல்ல நேரம் நீ ஆசைப்பட்டதும்….காதல் கல்வெட்டு மாதிரி போட்டோ ….இந்த இனிய இரவுக்கு சாட்சி……இல்லதேவி…”

“ம்ம்ம்” அவள் கண்கள் செல்பியில் இருக்க…


“தேவி…ந்யட்டி ல ஓபன் இருக்கு…”

“ம்ம்ம் …ஆமாம்….இருக்கு….”

“வேணும்டி….”


அவனுடனான இந்த ஸ்வீட் நத்திங்ஸ்ல் சுருங்கி மயங்கி கிடந்த..கண்கள் ….தெளிர்ச்சிக்கு வந்து..ஹாங்…ன்னு…திகைக்க…

‘நோ…’

“யெஸ்…”

ஐய !!! இவன் என்ன கேக்குரான்னே தெரிலேயே!!!! விழித்தாள்…

சாமிக்காவது தேங்க்ஸ் ஆவது….சாயங்காலம் பார்த்துக்கலாம்…

இவன் கிட்ட தூக்கம் வருதுன்னு தப்பிச்சுட வேண்டியது தான்….

பொறுக்கி!!!!
விடமாட்டான்…நல்லா ருசி கண்டுட்டான்…பிராடு….
கொஞ்சினாள்…

இது திட்ரமாதியே இருக்கே….!!!! மனம்….

காதலனின் இச்சையை மெச்சினாலும்….. அவனின் வேகம் கண்டு பயந்தாள்….

நீ தான் இடம் குடுத்த….அனுபவிமா….!!! அனுபவி!!!!

நாம அன்பை தானே கொடுத்தோம்….இவன் தேடல் ??
ஆணுக்கு அன்பு உடலால் தான் செய்ய முடியுமா???
தலைய பிச்சிக்கொண்டாள்….

“சிவா , ரவி கால் பண்றான்….இதோ திரும்ப பேசுறேன்…..”

வைத்து விட்டாள்….


மனம் …திகிலில் திளைத்தது….. அவனை பிடிச்சிருக்கு….
மெய்யாவே உயிர் வரை……..

ஆனால் திருமணத்திற்கு முன்…..இப்படி கொஞ்சி குழாவுவது….தவறுதான்….

நான் தான் இடம் தந்துட்டேன்….


எங்க புத்தி வேலைசெஞ்சது….


சிவாவை கண்ட்ரோல் ல வச்சிருக்கணும்…பக்கி….

அவன் நல்லவன்… கண்ட்ரோல் ல தான் இருந்தான்….

நீ தான் எகிறி எகிறி விளாடினது…. கெடுத்தது….!!! மனம்

மெசேஜ் சவுண்ட்….சிவாவிடமே….
பார்த்தாள்…

தேவி தேவி தேவி தேவி தான்…

“என்னாச்சு தேவி….”

“தூக்கம் வருதுங்க சிவா….”

“அப்ப தூங்கு…பை….கோபமா??

“இல்ல..”

“கோபம் தான்…”

“இல்ல”

“பேசுடி…”

“தூக்கம் வருது….தூங்க விடுங்க….”டைப் அடிக்கும் போதே அழுகை வர…

போன் அடித்து விட்டான்…

எடுக்கவில்லை….

அவனும் விட வில்லை….

எடுத்தாள்….

“என்னாச்சு” தவித்தபடி….

“ஒண்ணும் இல்ல…சிவா…இவள் கலங்கிய படி….

“நான் நைட்டி பத்தி கேட்டது உனக்கு பிடிக்கல…அப்படி தானே???”


“ச்சே ச்சே…அதெல்லாம் இல்ல சிவா…நிஜமாவே தூக்கம் வருது….”


“இதோ பாருடி….உன்ன நம்ம கல்யாணதன்னைக்கு தான் பார்ப்பேன்….இனி பிரீ யா …தூங்கு போடி….பை…”

பட்டென்று வைத்து விட்டான்….

கோபமே வராது ன்னு சொன்னான்….இப்பிடி பண்றான்???


எனக்கும் தான் அழகையே வராது ….இப்ப சும்மா கொட்டுதுல்ல….eeeee

அதுமாதிரி தான் அவனும் சிங்க் ஆகுறான்…..பாவம் …நல்ல பிள்ளை தான் என் யான குட்டி…..கொஞ்சினாள்….

என்ன பண்ண….சிவா???

கிட்ட வந்தா…பயமா இருக்கு…எட்ட போனா வலியா இருக்கு….விசித்திரம்….இந்த லவ்….பீல்….

நாம தொடங்கினது….. நாம தான் சரி பண்ணனும்…..

‘இச்சு..இச்சு.சிவா….ஐ லவ் யூ sooooo மச்…..’

போன் போட்டாள்.. வலிய…

எப்ப பாரு எதாவது மாத்தி மாத்தி செஞ்சி பல்பு வாங்குறதே வேலையா போச்சு….இவளுக்கு….!!!! மனம்…அம்மா மாதிரியே காய்ச்சியது…..

இவனிடம் தான் இத்தனை சொதப்பல்ஸ்…. காரணம் காதல்….!!!


திரும்ப திரும்ப திரும்ப..இவள் இம்சை குடுக்க….


தாளாமல் எடுத்தான்….


“நான் ஒர்க் ஷாப் போணும்….”


“போங்க ..யார் வேணாம் ன்னா…”நக்கலாய்…புருஷனிடம் பேசும் பொண்டாட்டி போல…


“ப்ச் என்னடி வேணும்… உனக்கு??? “சலித்தான் புருஷனாகவே….


“நீங்க வேணும் முடில….” அவன் டயலாக் ….சொல்லு போதே…. இவளுக்கே சிரிப்பு தாளல….


எதிர் பக்கம் அமைதியா இருந்தது….சின்ன சின்ன ஒலிகள்…

சிரிக்கிறான்…. சிரிக்கிறான்….!!!


“நீங்க என்ன டிரஸ் போட்டருக்கீங்க…உங்க சட்டைல நெட்டுக்கு பட்டன் இருக்கு……எனக்கு கஷ்டமா இருக்கு……..”அவளுக்கு சிரிப்பு பீறிட்டு வந்தே விட்டது…..

அவனும் குலுங்கி குலுங்கி சிரித்து விட்டு…..

அதுக்கு என்ன பண்ண?? …எகிறு போட்டான்…

“சட்டயே போடாதீங்க…மாஸ்டர்….”கலகல வென்று சிரித்தாள்…

அவன் கோபத்தையும் வேகத்தையும் தாங்கி ….அவனை குளிர வைத்தவளை…நினைத்து…..!


நெகிழ்ந்து…

“நீ என் தேவதை பெண்ணடி…….அம்மு உன்ன கண்ணுக்குள்ள வச்சி…..”.அவன் தொடர….


“இருங்க..இருங்க.. ….கல்யாணதன்னைக்கு நிறைய டெர்மஸ்& கன்டிஷன்ஸ் லிஸ்ட் இருக்கு அதை பார்த்த பிறகு தேவதையா? ராட்சசியா? சொல்லுங்க…..அப்ப பாப்போம்” சன்னக் குரலில் சிரிக்க….“நீ என்ன சொன்னாலும் சரி…….நான் செய்யரென் டா…. தேவிமா…நீ என் தேவதை பொண்ணு டா…. . உன்ன ஹர்ட் பண்ணியிருந்தா…சாரி…….இனி தப்பா பேச மாட்டேன்…கன்னுக்குட்டி…” குழைந்த குரலில்……

அவன் இலகுவாய் மன்னிப்பு வேண்ட….


“அதெல்லாம்…ஒன்னும் இல்ல…விட்ருங்க….நல்லா சாப்பிடுங்க….அப்பப்ப மெசேஜ் பண்ணுங்க…மாமா….”


“மாமா வா?? ஆச்சர்யத்தில் வாய் பிளக்க….

உறவு முறை விளி எல்லாம் கவசம் டா….எரும குட்டி !!!!


“சொக்கித்தானே போகிறேன் …மாமா கொஞ்சம் நாளா….”ராகமாய் இழுத்து
யெஸ் மாமு…….முடித்தாள்…

சிவசுதனின் ஸ்ரீதேவி…..

இதோ இருவரும் பாச உறவுகளை மதித்து…சமூக அமைப்பின்பாதுகாப்பு விதியை மதித்து…
இனிய திருமண கனவுகளோடும் ஆசைகளோடு காத்திருக்கின்றனர்… வாழ்த்துவோம்…மணமக்களை..@@@@@@@
“ஏண்டி இப்டி அடம் பிடிச்சுட்டுருக்க…பாரு பெரிய பெட் ரூம் பெரிய கட்டில் அந்த ரூம் தான் வசதியா இருக்கும்….அத விட்டுட்டு இந்த உன் டன்ஜன் ரூம் தான் வேணும் ஆகாத்தியம் பண்ற….மாப்பிள்ளை என்ன நினைப்பார்…”

“அவரை கேளுங்கம்மா..அந்த ரூம் தான் வேணும்ன்னா அவரை அங்க போய் படுக்க சொல்லுங்க…நான் என் ரூம் ல தான் படுப்பேன்…இது என் ராசியான ரூம் “

அம்மாவிடம் எகனைக்கு மொகனை பேசி எகிறு போட்டு கொண்டிருந்தாள் ஸ்ரீ

“வாய்மேலேயே போடபோறேன்…நீ ஒரு இடம் …அவர் ஒரு இடம் படுக்கவா பர்ஸ்ட் நைட்….கடைசி நேரம் இப்படி பண்றியே…

அங்க பூ அலங்காரம் செஞ்சதெல்லாம் பார்த்துட்டு தானே இருந்தே ஸ்ரீ…இங்கே படுக்கறேன்னு சொல்ல வேண்டியது தானே…..”

அவளுடைய அம்மா கனகவள்ளி …இவளை காய்ச்சி காய்ச்சுன்னு காய்ச்சி எடுக்க….

“யம்மா…உங்க ரூம் ….உங்க கட்டில்…இப்டி பூவுலேயே படுத்துக்க ஆசப்படுறீங்க போல ன்னு ….வேடிக்கை பார்த்தேன்….எனக்குன்னு சொன்னிங்களா? ஒரு தடவையாச்சும் சொன்னீங்களா???”

இவள் சிரிக்காமல் சீரியஸ்யா சொல்ல….

வள்ளிக்கு சிரிப்பு தாங்க முடில….

“பைத்தியக்காரி.. பைத்தியக்காரி….நான் படுக்கவா???? ச்சீ..ச்சீ…அசிங்கமா பேசாதடி….” அக்கம் பக்கம் பார்த்தவர்…வெட்கம் வர
வாய் பொத்தி சிரிக்க ஆரம்பித்தார்…..

ரவி அந்நேரம் அவ்விடம் வர….சிரிப்பை பொத்தி …இவள் பண்ணும் அடத்தை சொல்ல….

“ஏன் ஸ்ரீ..சின்ன விஷயத்துக்கு ரொம்ப பண்ற….எவ்ளோ செலவு தெரியுமா? அலங்காரம் பண்ண??”

அவன் கவலை அவனுக்கு…..!

“நம்ம நந்தினியை இப்பவே அம்மா முன்னாடி கல்யாணம் பண்ணிக்க….ரெண்டு செலவு மிச்சம்….” இவள் ஐடியா தர…..

ரெண்டுபேரும் ஒரே நேரத்தில் முறைத்தார்கள்….

“ஆமாம் வீடு நிறைய ஆட்கள் வச்சிகிட்டு இந்த ரூம்க்கு எப்படி போறது? வெக்கமா இருக்கு….”
வீணா போவுது ன்னா ஒன்னு நானும் அம்மாவும் படுக்கணும்….இல்லாட்டி நீயும் அவரும் படுக்கணும்….நான் அவர் கூட போவ மாட்டேன்….போ….”ஒரு சிணுங்கு சிணுங்கி….

“ஏன் புரிஞ்சிக்க மாட்ரீங்க….” செண்டிமெண்ட் பிட் ஒன்னு போட்டாள்….
யோசிக்கட்டும்…..

அவர்களுக்கும் இப்படி கூட சங்கடம் வரும் தெரியாததால் முழித்தார்கள்…..

டையனிங் ரூம் இல் இந்த பேச்சுக்கள் நடக்க…

அங்கு சிவா பொறுமை இழந்து கொண்டிருந்தான்….

காலையிலிருந்து எப்ப வருவ? எப்ப வருவ? தேவியிடம் கேட்டு அலுத்துவிட்டான்….

அவள் காலையிலிருந்து புதிதாய் பார்ப்பது போலவே
பார்த்து வைப்பது அவனுக்கு கடுப்பை தந்தது….

மாமா ன்னா…. இப்போ சும்மா இருக்கா???

புரிந்து கொள்ளமுடியாமல் தவித்தான்….கையில் சிக்கிய நேரமும் ஒட்டாமல் இருக்க அவளுடன் தனிமையை ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்தான்….

ஆனால் ரவி இவனுடனே சுற்ற…..பொறுக்காமல்…

ரவி கூட பேசி பேசி…..மூட் கெட்டது தான் மிச்சம்….எப்படி தான் சலிக்காமா காசு பத்தியே நாள்பூரா பேசுறானோ…..

இப்ப அவனும் காணாமல் போக தனியாக பாவமாய் அமர்ந்திருந்தான்…

தேவி..தேவி….தேவி….ஏங்கி கொண்டு….

இங்கு

ரவி சிவா கிட்ட பேசிட்டு வரேன்….என்று போக….

“போய் உடம்புக்கு ஊற்றி நல்ல சேலை உடுத்து….நான் தலை வாரி விடுகிறேன் வள்ளி சொல்ல ஸ்ரீயும் தன் அறைக்கு சென்று தயாராக….

இவள் சேலை கட்டி ,லேசாய் மேக்கப் போட்டு வெளியே வரும் போது….சொந்தகாரங்களை காணோம்….

இருந்தது….அம்மாவும் ரவியும் தான்….

அவர்களும்…நாங்க மாப்பிள்ளை அப்பார்ட்மெண்ட் க்கு போறோம்….நீ வீட்டை பத்திரமா பூட்டிக்க…..சொல்லிவிட்டு ரவி முதலில் வெளியே சென்றுவிட….

.
“ஸ்ரீ …மாப்பிள்ளை ஹாலில் இருக்காரு… தாயில்லாத பிள்ளைடா அன்பா வச்சிக்க….” எடுத்து சொலலி…. .

மகளுக்கு .தலை நிறைய பூவை சரமாய் பின் பண்ணி விட்டு…

ஆசையாய் அழகு பார்க்க…..

“ஏம்மா இவ்ளோ பூ கனமா இருக்கு??? “இவள் ஆட்சேபிக்க….

மகளின் உச்சியில் முத்தமிட்டு….

இன்னைக்கு மட்டுமாவது வை டா….

“வீட்டில் எல்லாம் இருக்கு நல்லா அவருக்கு சாப்பிட குடு….பத்திரம் ஸ்ரீ….
வா நீ வந்து பூட்டிக்க….”

அம்மாவோடு கூட போக அவனும் சேர்ந்து கொள்ள இருவரும் அவர்களை வழி அனுப்பி வைத்து…உள்ளே வந்தனர்….

தலை வாசல் பூட்டியது தான் தாமதம்….

தேவியை பின்னொடு அணைத்தவன் அவள் தோள்வளைவில் முகம் புதைத்து முத்தமிட்டான்….புசு புசு வென பாம்பின் சீற்றம் அவன் மூச்சில்….
இவள் எதோ பேச வாய் திறக்க….

“நோ……..முடியல…..”வாயோடு வாய்பொத்தினான்…தேவியின் நாயகன்…..

பேசாதே என்பது போல் வாய் அடைத்தவன்.

“எந்த ரூம் போலாம்” மயக்கத்தோடு

“உங்க இஷ்டம் “

“நீ சொல்லு”

“யூ டெல் ” இவள்

“இங்க பாரு விளையாடு…. எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஆனா இந்த நேரத்துல செஞ்சியென்ன இந்த இடத்திலேயே வாசலேயே ….”

பேசிக்கொண்டிருந்தவன்….

இவள் பக்கம் கவுண்டர் வராததால் முகம் பார்க்க….

இவள் அமைதியாய் வேற்று பார்வை பார்ப்பதை பார்த்து..

“என்னாச்சு தேவி?

என்ன பிடிக்கலையா?”

சிறுபிள்ளை போல் கேட்டான்….

அங்கேயே கீழே உட்கார்ந்து கதவின் மெல் சாய்ந்தவள்..முகம் வாடி கண்மூடி இருக்க….இவன் கேள்வி காதில் விழாதது போல் மௌனியாய இருக்க இவனும் அவள் அருகில் ஒட்டி அமர்ந்து
நன் தொடுறது பிடிக்கலையா?? குழம்பினான்…

10 நாளுக்கு முன் இருந்தவள் இவள் இல்லை …
பெண்களை அறியாதவன்…முதன் முதலாய் கிள்ளையாய் தொத்தி கொஞ்சி லவ் சொன்னவள்…ஒரே நாளில் உன் சொர்க்கம் நான்தான்டா….உணர வைத்தவள்…இடைப்பட்ட நாளில் மாமு மாமு என்று பேச்சிலேயே கழுத்தை கட்டி தொங்கியவள்….முதல் இரவுவில் பேசி டைம் வேஸ்ட் பண்ணக்கூடாது உத்தரவு போட்டவள்…

இப்படி ஊமையாய் ஆனது….இவனுக்கு புரியவில்லை….

‘எதோ நான் தப்பு பண்ணிட்டேன் போல…’

இவள் கோபம் இத்தகையதோ?….ஆசையை போல கடுமையாய்….

“தேவி சாரி டா உன்ன எதாவது ஹர்ட் பண்ணியிருந்தா சாரி டா…”

“இன்னைக்கு எனக்கு எதுவும் கூட வேணாம்…இப்படி பேசாமல் மட்டும் இருக்கதடா..ப்ளீஸ்…மாமுன்னு கூப்பிடு…” தொடர்ந்த
அவனின் வேண்டுதல்களையும் அலைப்புறுதலையும் தாங்க மாட்டாது….

“ஏன் இப்டி இருக்கீங்க???”

“எப்படி ?”

கண்ணைச்சுருக்கி உற்று பார்த்து..ம்ம்ம்….

“என் கண்ண பார்த்து சொல்லுங்க எத்தனை கிலோ குறச்சீங்க?….”

“3கிலோ. “

“நம்ப மாட்டேன்….”

“அவ்ளோ தான்டா பட்டு” கொஞ்சி

“இருக்காது..நிறைய இருக்கும்..மார்னிங் ஆசையா உங்கள பார்த்த இப்டி ஸ்லிம்மா இருக்கீங்க…
முகம் சுளித்தவள்…. எனக்கு பிடிக்கல…போங்க…”

“ஏன்டா நீ தானே நான் குண்டாகனும் குண்டாகனும் அனத்திட்டே இருந்த….உன்னால 9 நாள் ல முடியாது….அதனால உனக்கு சர்ப்ரைஸ். ஆஹ் இருக்கட்டும் ன்னு நான் ஒர்க்கவுட் பண்ணினேன்…நீ சந்தோஷத்தில கண்ண விரிச்சி…சூப்பர் ன்னுசொல்லுவ பார்த்தா ….

இப்படி காலையிலிருந்து என்ன பார்க்காம வெறுப்பேத்துற..பாருடி…ப்ளீஸ்…”

“ப்ச்….”உதட்டை சலிப்பாக சுளித்தவள்…

“உங்க வேலைய தொடங்குங்க….நான் ரொம்ப ஹாப்பி தான்….” எந்திரமா சொல்ல

“போடி ஒன்னும் வேணாம்…” கோபித்து…..அவனும் சுணங்கி அவள் மடியிலே தலை வைத்து …பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டு …இமை மூடி கிடந்தான்….மனம் எதையும் தேட வில்லை…இந்த காத்திருப்பு நாட்களில் எப்ப? எப்ப? என்று துடித்த இளமை..இவளின் எதிரொலி இல்லாமல் திகைத்து தன்ஆர்வத்தை கை விட்டு விட….ஏதும் வேணாம் அமைதியாகி விட்டது..

பூனைக்கு மீன் பிடிக்காதாம்!!!!! Eeeee

மனசுக்கு உடம்புக்கும் இடையேயான மெல்லிய இழைப்பாலம் ரொமான்ஸ் கரண்ட் இல்லாமல் சும்மா கிடந்தது….

கோபப்படுவான்….எரிச்சல் படுவான் என்றே அவள் எதிர் பார்க்க…இப்படி நிராதரவு பிள்ளை போல் கிடப்பவனை பார்க்க சகிக்கவில்லை…..

அவளுக்கு அவன் மெலிவு ….

ஊராருக்கு சரிஜோடி லுக் தந்தாலும்…..இவளுக்கு …சராசரி பெற்றோர் உளள பிள்ளையாயிருந்தால் இன்னேரம் விருந்து குடுத்து புஷ்டியா தயார் படுத்தி இருப்பார்கள்…..அவனை கவனிக்க ஆட்கள் கிடையாது…அவனுக்கு அவனே செய்து கொள்ள வேண்டிய இடத்தில..டயட் மாத்தி இவளுக்காக மெலிந்தான் என்றால்…

இது இவள் அவனுக்கு செய்த கொடுமை அல்லவா????

ஒரு வார்த்தை கொல்லும்… ஒரு வார்த்தை வெல்லும்….மெய்….

இவள் சும்மா லூசு போல் வார்த்தை விட்டதை அவன் பெரிதாய் எடுத்துக்கொண்டு மெனக்கெட்டு மெலிந்து இவளுக்கு பொருத்தமாய் மாறியதை லவ் என்ற காரணத்தை சொல்லி கூட இவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…

மண மேடையிலே அழுகை வந்தது….ஆனாலும் சமாளித்து சின்ன உறுத்தலோடேயே நாள் பூரா அலைந்தாள்…

தன் சிறு பிள்ளை தனத்துக்காக வெட்கப்பட்டு….அவனை சிரமப்படுத்தியதற்காக அவள் மனம் அழ……சேர்ந்து கண்ணும் அழ…….
அதன் ஒரு சொட்டு அவன் நெற்றியில் பட…..

அதிர்ந்து எழுந்த சிவா அவளை நெஞ்சோடு பிறந்த பிள்ளை போல் அணைத்துக்கொண்டான்…..தானும் கண்கலங்கி….

“ஏண்டி ..நீ டாக்டர் தானா??? இப்படி எல்லாத்துக்கும் பச்ச புள்ள மாதிரி அழுற?? என்னால எந்த சங்கடமான நிலைமையை கூட கையாளமுடியும் ன்னு திமிரோட திரிஞ்சேன்…அத உன் அழுகையால அழுச்சுட்டடி…நீ அழுதா நானும் அழனும் ன்னு தோணுதடி…என் கர்வம் …நீ ஒண்ணுமே இல்ல போடா ன்னு ஒரு நிமிஷத்துல ஆக்கிடுர டி…..நீ யாருடி… சொல்லுடி….என்னை ஆக்க வந்தவளா?? அழிக்க வந்தவளா???? ….வாழ வைக்கணும் ன்னா . மடில போட்டுக்கடி…… தேவிமா….. என்ன கொல்லுவதானாலும் உன் கைகளால் என்றால் அது எனக்கு வரமடி….தேவிமா…அவன் பிதற்ற…

அவன் வாயை தன் மருதாணி கைகளால் இவள் பொத்தி …குளமாய் நிரம்பிய கண்கள் பள பளக்க …பேசாதே..என்பதாய் தலை ஆட்ட…

“இப்ப என்ன பண்ணனும் ?நான் நல்லா சாப்பிடணும்….அவ்ளோ தானே …” கேட்க….

ஆமாம் …. என்று தலையசைத்து தலையில் வைக்கப்பட்டிருந்த மல்லிகை சரங்கள் தோரணங்களாய் ஆட….கவிதையாய் அபிநயத்தவளை… கண் கொள்ளும் வரை வாங்கியவன்….

“இப்பவே குடு வயிறு நிறைய சாப்பிடுறேன்….தா… ” அடுத்த நொடி அவனிடமிருந்து பிரிந்து எழுந்து….காற்றாய் சமையலறை ஓடினாள்…அவனின் தாயாய் தேவி….

உணவை மென்று கொண்டிருந்தவனை…என் சாரி நல்லர்க்கா??

“ம்ம்ம்..”

அவனுக்கு என்ன தெரியும் சாரி பத்தி …

அவ பார்க்க நல்லார்ந்தா சரி….

“ம்ம்ம்ம்…என்ன பண்றீங்க …சாப்பிட்டுட்டு கைகழுவிட்டு…இதெல்லாம் அப்படி அப்படியே வச்சுட்டு என் ஸ்டெடி ரூம் க்கு வந்துருங்க….” ஆர்டர் போட்டாள்…. ராணியாய்….

எனக்கு பெரிய வேலை ஒன்னு …இருக்கு….கே

பெருவிரல் காட்டிவெற்றி சைகை காட்டிவிட்டு போக…

என்னடா …… ஒரே மர்மமா இருக்காளே…. கவலை வந்தது….

இன்னொரு முறை அவ அழுதால் கண்டிப்பா உணர்ச்சியெல்லாம் வத்தி போய் சாமியாரா போயிடுவேன் ….

கடவுளே…..நொந்துகொண்டான்….

இவன் சாப்பிட்டு முடிக்க அவள் அவன் முன் வந்து நிற்க ….அவளின் உடை கண்டு காண்டானான்….ஏண்டி இப்படி?????!

இன்னைக்கு ஒன்னும் நடக்காது முடிவுக்கே வந்தும் விட்டான்…

இவனுக்கு பிடிக்காத உடை அது…. சுடி ….போட்டு அவன் விரும்பி பார்ப்பதை நல்லா முழுக்க மூடி ஷால்….

போடி….இப்டிலாம் வெறுப்பேத்தாத…..பிச்சி…கொஞ்சினான்…

ஏழு திரை போட்டு நீ மறைத்தாலும் நான் ….உன்னை விடுவதாயில்லை….போட்டிபோட்டான்….காதல் பொங்கி வர…..

“இது என்ன டிரஸ் தெரிதா மாமு????”

“சுடி தானே ?….”

“ம்ம்ம்…தெரில…” கண்ணை உருட்டி கேட்க…

தெரில என்பது போல தலை ஆட்டி….அதுதானே…வேற என்ன….

“போங்க உங்க பேச்சு கா….ம்ம்ம்ம் “சிணுங்க….

“எதுக்கு டி…கா??”

இழுத்து மடியில் அமர்த்தினான்….டையனிங் ரூமிலேயே….

வாயை இங்கும் அங்கும் உலட்டி….

“தெரில…”

காஞ்சனா படத்துல கேக்குற மாதிரியே கேக்குறாளே!!!!

தவித்தான்….

‘வச்சிட்டா ஓரவஞ்சனை பண்றேன்…’

“நிஜமாவே தெரில….டி” பாவமாய்….

சரி போனா போவட்டும்….மன்னித்தாள்….

“அன்னைக்கு ஓபன் வைக்க சொன்னீங்களே அந்த சுடி….இப்ப நியாபகம் வருதா????” ஆசையாய்….

மெல்லிய முறுவல் …எழ…

சிவாவின் முகம் மென்மையானது….அன்றைய பொழுதுகளில் மனம் லயிக்க…..அன்று முழுவதும் இருட்டில் இருந்ததால் இந்த சுடியின் அடையாளம் பிடிபட வில்லை…ஆனால் இப்பொழுது….அதன் மேல் கூட மோகம் வந்தது…

இங்கு அவனின் லூசு பொண்ணு…..

“டொட்டடோய்ன்…ஓபன் வச்சிட்டேன்….பாருங்க…பாருங்க….” நீட்டி முழக்கி….
ஷால் எடுத்து காட்ட…ரெண்டு பட்டன் வச்சி. தைக்கப்பட்டிருந்தது….

கணவனின் மனம் மாறியதை அறியாமல்….

“இப்ப பிடிச்சிருக்கா??? ஹாங்…” பெருமையாய் கேட்க….

மயங்கி கிடந்தான் அவளின் அன்றைய காதலன்…பேச விரும்பம் இல்லை….

“ம்ம்ம்”

அவளை அப்படியே கைகளில் அள்ளி… அவள் அறைக்கு சென்றான்….இவளை காதலிப்பதாக முதன் முறை சொன்ன சாட்சிகளிடம் கூட்டி சென்றான்….
இன்று அவளை என் மனைவியாய் உரிமையாய் கொள்வதையும்….அதுகள் பார்க்கட்டுமே…..

இங்க பாருங்க…மாம்ஸ்…கண்ணாடி வளையல்,பொட்டு, கொலுசு….இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே இருக்க….

அவன் கேட்காதவன் போல….அவளை பூவாய் சுமந்து சென்று கட்டிலில் கிடத்தினான்….

இவளுக்கு வாய் வலிக்கவே வலிக்காதா???

இவ்ளோ பேசுரா!!!! Eeeee

வாயோடு வாய் வைத்து அவள் மேல் சரிந்தான்…அன்னைக்கு மாதிரியே…..
ஆனால் அன்று முதன் முதலில் என்பதால்….நடுங்கி தடுமாறி…பின் தான் சரி படுத்தி கொண்டான்…

இன்றோ….

இடையில்.9 நாட்களில்.. ஏகப்பட்ட மன ஒத்திகைகள்…..

நெட்டில் வேற தேடி தேடி….பாடம் படித்து கொண்டான்…

ஜஸ்ட் தியரி….eeeeeee

மிக மிக நிதானமாய் …மெல்ல …மெல்ல…..கடித்து வைத்து வலிக்காமல்…. ஆழமாய்….மென்மையாய் முத்தமிட்டவனை …
தேவி…..ஆச்சர்யமாய் தன் கயல் விழி விரிய பார்க்க…..

அவனும் அக்கண்களையே ஊன்றி பார்க்க…வட்டத்துக்குள்…வட்டமாய்..சுருள் சுருளாய் வட்டங்கள் விட்டங்கள் ஆரங்கள்…..வாவ்….

இப்படி கூட….உயிரை கவ்வி முத்தமிடமுடியுமா????

ஐயோ….
செஞ்சுட்டானே….சிவா …செஞ்சுட்டானே…..ஏஏஏஏஏ

டாக்டர் பொண்ணேயே கவுத்துட்டானே….வாவ்…

முத்தத்தில் மூர்ச்சை அடைந்தவள்…. காற்றுக்காய் மூச்செடுக்க….

விட்டு கொடுத்தவன்….அவளை பக்கத்தில் சாய்த்து கொண்டே…

“தேவி…இனி எதுக்குடி ஓபன்லாம்….லூசு…”என்று நிதானமாய் கேட்க….

ஒரு தரம் சும்மா யோசித்தவள்.

“மாம்ஸ் அன்னைக்கு கேடீங்களே…”

“ஆமாம் கேட்டேன்…அன்னைக்கு வேற தேவை….இன்னைக்கு இல்ல….” தெளிவாய்…..

அவளுக்கு அவன் சொன்ன அர்த்தம் …புரில….eeee

“போங்க…அதெல்லாம் தெரியாது….முன் பக்கம் தான் டைலர் தைப்பேன் ன்னு சொல்லிட்டாங்க….என்னதான் பேஷன் ன்னாலும் என்னாலே ரெண்டு முடியாதுன்னுட்டாரு….இங்க பாருங்க …உங்களால பின் பக்கமும் பாதி
முதுடு வரை நானே கட் பண்ணி…….கயிற மட்டும் தச்சுட்டேன்….நல்லர்க்கா???”
அவனிடம் முதுகு காட்டி கேட்க….அது கோடு போல் இழுத்திருக்க… ஒன்றும் தெரிய வில்லை….

“முன்னடியும் பத்தாது…பின்னடியும் பத்தாது….”அவன் குறை சொல்ல….

காண்டான தேவி..

“போங்க..எப்ப பாரு…வேணும் வேணும்ங்குறது…அப்புறம் ஆசையா செஞ்சா வேணாம் பத்தலங்குறது…….இந்த சுடியே வீணா போச்சு போங்க…என்று சர சர வென முழுக்க கழட்டி விட்டு அதை கட்டிலில் போடபோனவள்…….”eeee

இப்போ தான் உணர்ந்தாள்….தன் தவறை….eeeee

ஆஆ ஆஆ ஆஅ

ஐய….

உனக்கு மாடர்ன் டிரஸ் போட்டு கூச்சமே இல்லை …சீய்….. ஷேம்…பப்பி ஷேம்….பக்கி……

இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்காத….சிவா….. ஆசையாய் ஆயிரம் கண்ணால் பார்க்க முயல….

இதென்ன முண்டா பனியன் ….ஸ்லிப் ….அதிர்ச்சியானான்…

அவள் அதற்குள் மாராப்பாய் அதே சுடியே குறுக்கில் போட்டு
அன்றைய டயலாக் வுட்டு

“எனக்கு தூக்கம் வருது…”

இவள் நடிக்க…

பாய்ந்து அள்ளிக்கொண்டான்…

லைட்… லைட்…..இவள் கத்த….

“கத்தாதடி…. பக்கத்து அக்கத்துல போலீக்கு போவ போறாங்க…..”கேலி பண்ணான்….

“எனக்கு வெளிச்சம் இருந்தா தூக்கம் வராது….”

அவன் கைகள் அலைந்த அலைச்சல்கள் கண்டு வெட்கப்பட்டு…பொய் சொன்னாள்…

“யாரு இப்ப தூங்க போறா???

“ஐய போடா ….ஒரு மாதிரி இருக்கு….”

இருக்கட்டும்டி …டைம் வேஸ்ட் பண்ணாத….உதடுகள் அவள் உடல் மேய….இவள் தவிக்க….அவன் துடிக்க….முடில….இருவருக்கும்…..

எதை விடுவது….எதை கொள்வது…..திணறினான்…ஐயோ பாவம்…..
அன்றே சுதந்திரம் தந்தவள்…. இன்று மய்யமாய் கிடக்க….
அவனுக்கே அவனுக்கேயான சொர்க்கங்கள் ….

முதன் முறை ஆளும் பெண்மை….சொக்கவைக்க கிறங்கி மயங்கி சுகம் தாளாமல் தவித்தான்….
அவனின் அவசரங்களில் அசைவுகளில் ஆடிய பெண்மை புது புது உணர்வை ….உச்சியில் விதைக்க…..தாளாமல் தேவிமா….தேவிமா சுகமாய் அனத்தினான்….
அவள் தலை முடியை கொத்தாக பற்றி இருந்தவள்….அவன் வேகமெடுக்கும் போது அழுத்தி பிடித்து இழுக்க…அவன் கொஞ்சம் வேகம் குறைக்க வேண்டும் ன்னு அர்த்தம்……..இவள் முடியை தளர விடும் போது….அவன் வேகமெடுக்க வேண்டும் அர்த்தம்………காதலை சப்தமில்லா சங்கீதமாய் இருவரும் உணர…
உயிராய் உணர்வாய் கலந்தவள்….

எதோ வாய் விட்டு புலம்பியவளை ….

“என்னடி…” கிறக்கமாய்….

இந்த என்னடிக்கு தான் எத்தனை கவர்ச்சி….

“செத்துடலாம் போல இருக்கு சிவா…”

கிசுகிசுத்தாள்….

அவன் வெற்று முதுகை கட்டி இருந்தாள். அவள்….
இருவரின் உடலும் ஒருவர்க்கொருவருக்கு பொருத்தமாய்….
அவனின் அழகிய சிலையொத்த ஆணுடல்…அவளிடம் பிணைய பின்ன….தேவதை பெண்ணாய் உணர்ந்தாள்…

உன்னை ஆணாய் படைத்த கடவுளுக்கு நன்றி…..!!!
என்னை பெண்ணாய் படைத்த கடவுளுக்கும் நன்றி….!!!
உன்னை தந்தையாகவோ சகோதரனாகவோ பிறக்க வைக்காததற்கு நன்றி….!!!!
நான் உனக்கு தாயாகவோ சகோதரியாகவோ பிறக்காததற்கு நன்றி…நன்றி…!!!
நம்மை ஜோடியாய் படைத்த இறைவனுக்கு நன்றி…..!!!
நீஇங்கு என் அருகில் பிறந்ததற்கு நன்றி….!!!
உன்னை கண்டு காதல் கொண்ட கண்களுக்கு நன்றி.!!!
உனக்காய் என்னை பூக்க செய்த இயற்கைக்கு நன்றி…..!!!
என் குடும்பத்துக்கு நன்றி….

என்னையும் தீண்டி பெண்ணாய் உணர வைத்த உனக்கு நோ நன்றி….
“பத்தல…..இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன்….மாமு….”
கதைகளுக்கு சொல்லும் கமெண்ட் அடித்தாள் அவனின் குறத்தி….

அவனுக்கு அவளின் நன்றிகள் ….புரிந்தாலும்….வம்புக்கு..

“என்னுடைய ஒரே நன்றி…..ரவிக்கு தாண்டி…..”

“ரவி ன்னதும் நினைப்பு வருது….வாங்க அந்த ரூம் க்கு போலாம்…வீணா போனா திட்டுவான் ” இவள் ரொம்ப அக்கறையாய் சொல்ல

“வா!! வா!!! போலாம்….என்ன பண்றது ரவிக்காக….”கேலி பேச

“ஹாங் ..இதோடா…ரொம்ப தியாகி தான்…..”அவள் குலுங்கி சிரிக்க….

காலைல ஹீல்ஸ் கிப்ட் பண்ணேனே ….என் போடல தேவி…

நல்ல நேரம் நியாபாக படுத்துனீங்க…..நிறைய சொல்லணும்…நீங்க அந்த ரூம் க்கு போங்க….ஹார்லிக்ஸ் எடுத்துட்டுவரேன்….

வாரே வாவ்…

அந்த பெரிய படுக்கை அறை …இப்படி சொல்லும் படி அட்டகாசமான மலர் அலங்காரத்தில் இருந்தது….

ரவி ரசனைக்காரன் ..மெச்சிக்கொண்டான்….

இவன் வெற்று மார்பும் இடுப்பில் பட்டு வேட்டியுமாய்…கவர்ச்சியாய்…

ஆனால் வேடிக்கை பார்த்தவனுக்கு….

தனியா உள்ளிருக்க ஒருமாதிரி இருக்க….அவளைத்தேடி சமையலறை போனான்…அவள் …அந்த சுடி டாப் மட்டும்…போட்டிருந்தாள் பாட்டம் இல்லாமல்….

இதுக்கு ஒரு வாரே வாவ்….eeee

அவள் சுடியை கழட்டி எறியும் போது..அவள் ஒன்னாய் ரெண்டாய் தைத்திருந்த கயிற்றில் ஒன்று அந்து போயிருக்க…அது அவளின் முதுகை v ஷேப் ஆக்கி …அதில் பூவோடுபின்னி சிவாவால் கலைக்கப்பட்ட பின்னல்…..என்று ஒரு காட்சியாய்……அழகோ அழகு தர….

.பக்கவாட்டு திறப்பு அவள் இளம் தொடைகளின் செழுமையை கொஞ்சமாய் காட்டி ….ஆனால் முழு கவர்ச்சி தர….
அவள் இயல்பாய் வேலை செய்து கொண்டு…அங்கு இங்கு அசைய…அவளின் வெளிச்சம் படா வெளிர் தொடையழகு… பளீர்…பளீர்…ன்னு மினுக்கி மினுக்கி ….அவன் கண்ணை பறிக்க…..தொடர்ந்து நீண்ட லேசாய் முடியோடிய மருதாணி கால்களில் அவன் கொலுசு…..வாவ்….

இவன் ஆண்மையை அசைத்து விட்டதை . …… அறியாள் ….அவனின் செப்பு சிலையழகி….

ஓய்….பின்னின்றி வளைஇடையோடு தன்னை சேர்த்தான்….செமையா இருக்கடி…. அழகி…கொஞ்சிக்கொண்டே.. அவள் பூக்களில் முகம் முகம் புதைத்தான்…பின்கழுத்தில் முத்தமிட ஜடை விளக்க…அதனுள் ஒளிந்திருந்த…மஞ்சள் கோடி இழையில் புரி புரியாய் முடிச்சோடு அவன் கட்டிய தாலி….

ஆஹா….அக்காட்சி ……அதை அவன் உணர்ந்தது கவிதை…..
என் மனைவி…..என் உயிர்….இச்சு இச்சு இச்சு….கழுத்தை சுற்றி ஆரமாய் முத்தங்கள்….இவன் இட…..

இவளுக்கு அவன் இப்படி அணைத்து கொஞ்சுவது மிகவும் பிடித்திருக்கவே….புன்னகையோடும் நிறைவோடும்….அவனை அண்ணார்ந்து பார்க்க…. நேர் வகிட்டில் குங்கும பொட்டு………நெற்றியில் ஒரு பெரிய சைஸ் பொட்டு…. வாவ்….

ஐயோ ….கவிதைப்பெண்ணாய் கொல்ராளே !!!!

முத்தமிட்டு முத்தமிட்டு புலம்பினான்…

முத்தத்திற்கு இசைந்து கொடுத்துக்கொண்டே இவன் குடிக்கும் பதத்தில் ஆற்றி கொடுக்க…

நீட்டிய கைகளில் அரக்கு நிற கண்ணாடி வளையல்கள்….சப்தமிட்டு என்னையும் பார் என்க…. விரல்களும் கைகளோடு முத்தங்கள்….முடியல….
நூறு ஜென்மம் வேண்டும்…..கடவுளே!!!!!
மயக்கத்தோடே…

அவளை குடிக்க செய்து தான் குடித்தான்…
கைகள் அவளின் திறப்புக்குள் விளையாட…கூச்சத்தால்…நெளிந்து வளைந்து சிரித்து….பெரிய அறைக்கு ஓடினாள்….

“ஐயோ ..கிள்றீங்க..நீங்க…போங்க… “அந்த ரூம் சுத்தி விளையாடினாள்….

“வாடி…”

“நோ…”

“வேணும்டி….”

“எடுத்துக்கோங்க….மாமு….

அங்கு பேச்சுக்கும் செய்கைக்கும் சம்பந்தம் இல்லை….
சிரிப்பும் சந்தோசமும் தான் இருந்தது…..

நாட்டுக்கோழியை அமுக்கி பிடித்து விட்டான்….

“இருங்க …கதவை சாத்திட்டு வரேன்….”

“நோ….”

விடுவதாய் உத்தேசம் இல்லை அவனுக்கு….

ஜஸ்ட் ஒரு நிமிஷம்….என்றவள்….வெளியே போய்…எல்லாத்தையும் சரி பார்த்துட்டு….கதவை பூட்டி…ரெண்டு பேன் யையும் போட்டு ஏ சிபோட்டு சில் பண்ணிட்டு இவன் கைகளில் விழுந்தாள் …அவன் தேவைக்காய்….

முதல் முறையை விட இன்னும் இன்னும் முன்னேறிய உணர்வு இருவருக்கும்…..

புதிது புதிதாய் எதேதோ சுகங்கள் ….மாயச்சூழலில் இருவரையும் இழுத்துப்போக….

கூடி களைத்த பின்… இருவரும் மோன நிலை எட்ட…..

அவள் வெற்று முதுகில்…..????? குறியீட்டு கேள்வி கேட்க??

அவள் …
அவன் முதுகில்…!!!!!! எழுதி பதில் தந்தாள்….

பெரும் ஹாஸ்யம் போல சிரித்தும் கொண்டார்கள்…

உழைப்பாளி சிவாவோ தூங்கி வழிய….

ஆனால் நம்ம சொகுசான தேவியோ….பிரெஷ் ஆ….

“மாமு….எப்படி இப்டிலாம் ஹீல்ஸ் வாங்குற ஐடியா வந்துச்சு….”

“நீ கொஞ்சம் குள்ளம் சொன்னியா?? சோ ஆசையா வாங்கினேன்…”

“ஓ…அளவு.??”

“ரெண்டு நாளைக்கு முன்னாடி நைட் உங்க வீட்டு கம்பௌண்ட் ஏறி குதிச்சி ….திருடிட்டு போனேன்…”

பாதி கண்களால் அவளை காதல் லுக் விட்டு சொன்னான்….

“ஏண்டி போடல….எவ்ளோநேரம் செலவழிச்சி வாங்கினேன் தெரியுமா???”

“ம்ம்ம்ம்ம்ம்….உங்க மாமியாருக்கு வாங்கியுருக்கீங்க???”

“ஹாங்…சொக்கிய கண்கள் விரிய???”

“இல்ல …போடி..உனக்குத்தான் வாங்கினேன்…”

“எங்கம்மா செருப்பை அளவுக்கு எடுத்துட்டு போனா…அவங்களுக்கு தானே…..”அசால்டா சொல்ல….

உங்கம்மாதா??? அதிர்ந்து பின் அசடு வழிந்தான் சிவா….

“நீங்க தூக்கிட்டு போன மறு நாள்… எல்லா இடமும் தேடிட்டு
எங்கம்மாவும் ரவியும்….நாய் தூக்கிட்டு போய் இருக்கும்ன்னங்க…”

“நான் நாயா??? டி…”இவன் முறைக்க…

“ஐய எங்களுக்கு நீங்க தான்னு தெரியதுல…இதோடா… ஆனா மாமு நான் அப்பவே இருக்காதுன்னு சொன்னேன்….”

“ஐயோ சூப்பர் அம்மு….” இவன் பாராட்ட…..

“நாய் ன்னா ரெண்டையும் தூக்கிட்டு போவாதுன்னு… யாரும் இந்த அறிவாளிய நம்பல மாம்ஸ… நம்பல…..eeeee” ராகமாய் இழுத்து பாட

ஹாஹா….வாய் விட்டு சிரித்தவன்….

“என் பட்டு அறிவாளி….” அவன் கன்னம் கிள்ளி கொஞ்ச….

“நிறைய மாரைஜ் அப்புறம் சொல்லணும் ன்னு நெனச்சேன் …மாம்ஸ…ஆனா ஒண்ணே ஒன்னு மட்டும் வேணாம் மாம்ஸ ……அது ஷாப்பிங்….உங்களுக்கு வரல… இப்டி பொசுக்கு பொசுக்கு பண்ணி…..முடில ….மாம்ஸ…. ஓகே….”

“எனக்கும் நீ இனி வாங்குன்னாலும்….முடியாது…தேவி…என்னால தேட முடில….”eeee

சரண் அடைந்தான்……யாருக்கிட்ட…….eeee

” நான் வாங்குவேன் கூட இருக்கணும் சரியா????”

கண்டிப்பா டா…என்று ஆசையாய் சொன்னவன்….

“தேங்க்ஸ் டா அம்மு….எல்லாத்துக்கும்…..ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்….என் வாழ்க்கை உன்னால் வரமாய் மாறிடுச்சுடி கண்ணம்மா…..”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க ஓவரா சொல்றீங்க போங்க….”

இவனின் உருக்கம் தாளாமல் சமாதான படுத்தியவள்….

“பாட்டு பாடுங்க….அன்னைக்கு சூப்பர் ஆஹ் இருந்துச்சி…நான் சரியாவே….ரசிக்கல….. “இவள் அவன் மூக்குரசி கேட்க….

அவள் கண்ணோடு கண் கலந்தவன்…..

மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தான்….

உருகுதே மருகுதே……..

ஒரே பார்வையாலே……

உலகமே சுழலு்தே……

உன்ன பார்த்தததால….

தங்கம் உருகுதுதா……

அங்கம் கரையுதா…..

வெட்கம் உடையுதா……

முத்தம் தொடருதா…….

வம்பு பேசி கலகலத்தவள் இனிய நினைவுகளில் முகம் கனிய…..

மெதுவாய் அவன் தோள் சாய்ந்து மழலையாய் உறங்கி போனாள் அவன் பூமரப்பாவை….

தன்னருகே அணைவாய் அவளை வசதியாய் படுக்கவைத்தவன்….மென்மையாய் அவள் நெற்றியில் முத்தமிட…சிணுங்கி திரும்ப கட்டியவளை…. ஆதுரமாய் அணைத்து….இறைவனுக்கு….அனைத்துமாய் இவளை தந்ததற்கு…. நன்றி…..மனதார சொன்னான்….சிவா…..

நாட்கள் வளருவது போல் இவர்கள் அன்பும் பாசமும் நேசமும் வளர….வாழ்த்துவோம்…….வாழ்க வளத்துடன்….